17.09.2012.By.Rajah.அமெரிக்கா உட்பட பல
நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில்
வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச்.
இந்நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது சுவீடனில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தில் இருந்து அவர் வெளியே வந்தால் கைது செய்யலாம் என லண்டன் பொலிசார் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்னை தீர வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத உலக நிகழ்வுகளால் தான் மாற்றம் வரலாம். அதாவது ஈரானுடன் போர் ஏற்பட்டாலோ, அமெரிக்க தேர்தல் நேரத்திலோ, சுவீடன் அரசு இந்த வழக்கை கைவிட்டாலோ இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாம். இவற்றில் மூன்றாவதாக கூறியது நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு குறித்து தீர விசாரித்த பிறகு சுவீடன் அரசு இதை கைவிடலாம். இதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும். எனவே, ஓராண்டுக்கு நான் ஈக்வடார் தூதரகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம் என்றார் |
திங்கள், 17 செப்டம்பர், 2012
ஈக்வடார் தூதரகத்தில் தான் தொடர்ந்து தஞ்சம்: அசாஞ்ச்
திங்கள், செப்டம்பர் 17, 2012
இணைய செய்தி