siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 செப்டம்பர், 2012

முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மிருக பலி பூஜை நடைபெறாது: சிவபாதசுந்தரம்

 
 
17.09.2012.By.Rajah.முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருகபலி பூஜை இந்த முறை நடைபெறாது என்று அந்த கோவிலின் பிரதம குரு காளிமுத்து சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. எனினும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொடர்சியான அடாவடி தனங்களினால் இந்த பூஜை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து இந்து கோவில்களிலும் இவ்வாறான மிருகபலி பூஜைகள் இடம்பெறுகின்றனாவா இல்லையா என்பது தொடர்பில் தாம் ஆராயவிருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது