siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 மார்ச், 2014

தீவிபத்தில் நிலவும் மர்மம்!

கனடாவில் கட்டடம் ஒன்றில் மூன்று பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கனடாவின் (Charlottetown) சார்லட்டவுன் மாகாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் சிக்கினர்.இவர்களை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடும் புகை மூட்டத்தினால் காப்பாற்ற இயலாமல் போயினர்.இதனையடுத்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அந்நபர்களை மீட்பதற்குள் அவர்கள் உயிரிழந்தனர்.மேலும் காலியான இக்கட்டடத்தில் வாலிபர்கள் சிலர் அவ்வப்போது வந்து செல்வர்...

வெள்ளி, 28 மார்ச், 2014

நிதி மோசடி மன்னர்களை சுற்றிவளைத்த பொலிசார்

  கனடாவில் நிதி மோசடி விவகாரத்தில் ஆறு பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களை மோசடி செய்து வரி மோசடியில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கனடாவின் RCMP பொலிஸ் குழுவினர் கூறுகையில், தாங்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் மோசடியாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கப்பட்டது என்றும் குறிப்பாக 1,000 – 300,000 வரைமுதலீடு செய்த 493 நபர்கள் மேல் விசாரணை நடத்தியுள்ளனர்...

புதன், 19 மார்ச், 2014

மர்மங்கள் நிறைந்த கலைநிபுணரின் மரணம்

சுவிசை சேர்ந்த பெண் ஒருவர் தன் தாயின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிசை சேர்ந்த 69 வயது நிரம்பிய ரெமி சாக் என்ற கலை நிபுணர் ஒருவர் பிரான்சின் முல்ஹவுஸ் மாகாணத்தில் உள்ள அல்சாஸ் பகுதியில் கடந்த சனவரி மாதம் சடலமாக எடுக்கப்பட்டார். இவர் தன் வீட்டின் முன் தலையில் இரத்த கரையுடன் இறந்து கிடந்ததை பார்த்த பொலிசாருக்கு, இவரது மகள் அப்பகுதியில் வசிப்பது தெரியவந்தது. இவர் தன் மகளுடன் வாழ்ந்து வந்ததால், அவரது மகளின் மீது பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில்...

வெள்ளி, 14 மார்ச், 2014

அரச குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கிய டயானா

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது.இங்கிலாந்தின் ”நியூஸ் ஆப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து உரிமையாளர் ரூபர்ட் முர்டோச் பத்திரிக்கையை மூடினார், தற்போது குற்றச்சாட்டின் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரச குடும்பத்தின் தொலைபேசி புத்தகத்தை...

புதன், 12 மார்ச், 2014

திருடிய ஓவியங்கள் ஒப்படைப்பு

  நாஜிக்களால் திருடப்பட்ட மூன்று ஓவியங்களை பிரான்ஸ், உரிய நபர்களிடம் ஒப்படைக்க உள்ளது.பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள டிஜான் நகர அருங்காட்சியகத்தில் நாஜிக்களால் திருடப்பட்ட ஓவியங்கள் உள்ளன. ஜேர்மானிய விநியோகஸ்தகர்களை சார்ந்த இந்த கலைப்படைப்புகளை, கடந்த 1935ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யூத பொருட்கள் ஏலத்தில் பிரான்ஸ்  வாங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே இதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ஆவுரிலி பிலெப்பெட்டி...

செவ்வாய், 11 மார்ச், 2014

புகலிட கோரிக்கையாளர்:சித்திரவதைக்கு உள்ளான நேர்காணல் செய்ய மறுத்த

கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு உள்நாட்டு பொலிஸாரினால் பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளான இலங்கைப் புகலிட கோரிக்கையாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்துள்ளனர். இது சம்பந்தமாக கேபிள் தகவல் ஒன்றை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கன்பராவில் இருந்து கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இந்த கேபிள் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை...

திங்கள், 10 மார்ச், 2014

குழந்தைகளை உலுக்கிய குளோரின்

கனடாவில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கலக்கப்பட்ட குளோரினை சுவாசித்ததில் 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான குழந்தைகள் அப்பகுதியின் Carling Ave என்ற ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் நீச்சல்குளத்தில் அதிகளவில் குளோரின் இராசயனம் கலந்திருந்தது, இதனை சுவாசித்ததில் 54 பேர் பாதிப்படைந்தனர். இவர்களை காப்பாற்றும் பணியில் பொலிசார் மற்றும் தீயணைப்பு...

புதன், 5 மார்ச், 2014

திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கனடாவின் ரொறன்ரோ பிராந்திய பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளனர். அதில், திருடர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரியவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்நேரத்தில் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்கள் என்றும், இந்நிலையானது...

தற்கொலை செய்யத் துடிக்கும் இராணுவ வீரர்கள்

அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல...

செவ்வாய், 4 மார்ச், 2014

கேபிளில் தீப்பிடித்ததே நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கு

ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு மின்சார கேபிள்களில் தீப்பிடித்ததே காரணம் என்று கப்பற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கப்பற்படை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் 26-ம் தேதி சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பேட்டரி பகுதியில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், பேட்டரி பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பேட்டரி பகுதிக்கு மேல் உள்ள மின் கேபிள்களில் தீ பிடித்து இந்த விபத்து...

திங்கள், 3 மார்ச், 2014

அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. 231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் நேற்று மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரி அவர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பினார். இதனைத்...