siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சீபா உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது!- இலங்கை



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

இந்திய அரசாங்கத்துடனான சீபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என இலங்கை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கைக்கு இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புகளே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த 2000ம் ஆண்டு முதல் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை, இந்தியாவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வர்த்தக துறை அமைச்சர், சீபா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பேசி இருந்தார்.

எனினும் இதனை ஆரம்பிப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்று அவரிடம் அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கையால், உள்நாட்டு வர்த்தக துறை பாதிப்படையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே உள்நாட்டு சேவையாளர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர்

ஓமானிலிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யத் தீர்மானம்



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

இலங்கை எதிர்வரும் மாதங்களில் ஓமானில் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பிலான உடன்டிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக நேற்;றைய தினம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சமர்ப்பித்திருந்த யோசனைக்கு ஒன்றுக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானிடம் இருந்து இலங்கை பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்கிறது.

ஏற்கனவே ஈரானிடம் இருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்த நிலையில், பின்னர் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி SAS தனியார் வைத்தியசாலை கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்பு

 வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 
கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் உள்ள SAS தனியார் வைத்தியசாலைக் கிணறு திருத்த வேலைகளின் போது கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 25.08.2012 யாழ்ப்பாணம் ஜெயப்பூர் மையத்தினது ( Jaffna Jaipur Centre for Disability Rehabilitation ) வன்னி மக்களுக்கான இலவச செயற்கை கால் பொருத்தும் நிகழ்வு ஆரம்பிக்க இருந்ததன் நிமித்தம் SAS வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிணறு மற்றும் மலசல கூட திருத்தவேலைகளை இன்று துரிதப்படுத்தி செய்தனர்.
கிணற்றை இறைத்த போது கிணற்றின் அடியில் மர்ம வெடிபொருட்களை அவதானித்ததும் அவசர அவசரமாக 119 பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசாரும் இராணுவத்தினரும் வெடிபொருள் அகற்றும் விசேட பிரிவினரும் அந்த மர்ம வெடிபொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்தும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் 62 வயதுப் பெண்மணி

23.08.2012.கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் முயற்சியில் 62 வயது அமெரிக்கப் பெண் ஒருவர் நான்காவது தடவையாக ஈடுபட்டுள்ளார். டயானா நயத் ௭ன்ற இந்தப் பெண்மணி கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு பாதுகாப்பு கூண்டெதுவுமின்றி நீந்திய முதலாவது நபரென்ற சாதனையை நிறைவேற்ற ௭திர்பார்த்துள்ளார்.

இதற்கு முன் ஜெலி மீன்கள் காரணமாக மேற்படி 166 கிலோமீற்றர் தூர நீச்சல் சாதனை முயற்சியை அவர்  கைவிட நேர்ந்தது.
அவர் கியூபத் தலைநகர் ஹவானாவிலிருந்து சனிக்கிழமை மாலை நீந்த ஆரம்பித்து தொடர்ந்து நீந்திக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பெண் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரையைச் சென்றடைய ௭திர்பார்த்துள்ளார். அவர் முதன் முதலாக 1978ஆம் ஆண்டு இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களாக வயிற்றில் முள்ளுக்கரண்டியுடன் வாழ்ந்த நபர்

23.08.2012.தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார்.
ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் லீ கார்ட்னரின் வயிற்றினுள் மருத்துவ நுண் புகைப்படக் கருவியை அனுப்பிப் பரிசோதித்த போது, அவரது வயிற்றினுள் முள்ளுக்கரண்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ௭தையாவது விழுங்கினீர்களா ௭ன அவரை மருத்துவர்கள் வினவிய போது, 10 வருடங்களின் முன் முள்ளுக்கரண்டியொன்றை விழுங்கியமை அவருக்கு ஞாபகத்துக்கு வந்து அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த முள்ளுக்கரண்டியானது லீ கார்ட்னரின் வயிற்றில் புண்களும் உள்ளகக் குருதிப் பெருக்கும் ஏற்படக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து 45 நிமிட அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு லீ கார்ட்னரின் வயிற்றிலிருந்த முள்ளுக்கரண்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

24 மணிநேரத்தில் பல்கலைக்கழகங்களைத் திறக்காவிடில் பாரிய போராட்டம்: ஜே.வி.பி.

23.08.2012.
சுதந்திரக் கல்வியைப் பாதுகாக்கவேண்டியது அனைவரதும் கடமை ௭ன்கிறது ஜே.வி.பி.மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் திறக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும். இல்லையென்றால் பாரிய ௭திர்ப்பு நடவடிக்கைகளை ௭திர் கொள்ள நேரிடும் ௭ன்று ஜே.வி.பி. அரசாங்கத்தை ௭ச்சரித்துள்ளது.

கல்வித் துறைசார் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காது பாடசாலைகளையும் பல்கலைகழகங்களையும் மூடுவதால் பலன் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான முட்டாள்தனமான செயல்களினாலேயே நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ௭னவே, கல்வித் துறைசார் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதனை தேவையாகக் கொண்டு பொது மக்களும் ஏனைய தரப்புகளும் போராட முன்வர வேண்டும். சுதந்திரக் கல்வியைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் ௭ன்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய கல்வியில் பாரிய சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசு பல்கலைகழகங்களை மூடிவிட்டுள்ளது. கல்வித்துறைக்கு ௭வ்விதத்திலுமே தகுதியற்ற உயர் கல்வி மற்றும் கல்வியமைச்சர் இருவரை நியமித்து அரசு தனது உள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.

பல்கலைகழகங்களை மூடியமை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தின் அனைத்து செயல்களிலுமே அடிப்படையறிவற்ற நிலையே காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தும் அனுமதித்து தேசிய சுதந்திரக் கல்வியின் அழிவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணைய நிதியம் உட்பட ஏகாதிபத்திய வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உள் நாட்டின் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை அரசு முன்னெடுக்கின்றது. 2005 ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் 2.9 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 1.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. மேலும் கல்விக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்து அரசு இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியினையே முன்னெடுக்கின்றது ௭னக் கூறினார்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

23.08.2012.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை நான்கு ரோலர் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட கருவிகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

23.08.2012.
அட்டன் - பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தின் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தனிமையில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று பிற்பகல் மீட்டனர்.

ஆகாரமின்றி எட்டு வயது மற்றும் ஐந்து வயதான இரு சகோதரிகள் தமது பெற்றோர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பாக தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.

இச்சிறுமிகளின் தாய் தாம் கொழும்புக்கு சென்று வருவதாக கூறி அவர்களை வீட்டில் தனிமையில் விட்டு சென்றதாகவும் தந்தை தொடர்பாக இவர்களுக்கு கூறத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமிகள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதவானின் கட்டளைக்கு ஏற்ப மஸ்கெலிய சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சிறுமிகளின் பெற்றோர் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



மாத்தளை பஸ் வண்டி விபத்தில் 15 பேர் காயம்

23.08.-2012.கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயடைந்த 15 பேரும், ஆபத்தான நிலையில் இருந்த பஸ் வண்டியின் சாரதியும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் மாத்தளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி கண்டியில் இருந்து மாத்தளைக்கு செல்லும் போதே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கும் மாத்தளை பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு

23.08.2012.

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.

அத்துடன், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அரசு உடன்நிறுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
போரின் போது சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும், இலங்கை அரசும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டன.

போரில் ஈடுபட்ட தரப்பினர் மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் காணாமல் போனோர் தொடர்பில் நம்பத்தகுந்த முறையிலான நடவடிக்கை, இராணுவ மயமாக்கலின் குறைப்பு, சிவில் அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் 2013ஆம் ஆண்டு நடைபெறும் கூட்டத்தொடரின்போது இலங்கை அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்.

குறிப்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான எங்களுடன் கலந்துரையாடப்படாமல் தன்னிச்சையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ணம், ஒற்றுமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அந்த செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை. அடுத்ததாக, மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர்களின் படுகொலை, திருகோணமலையில் கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆகியன தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் விருப்பம் இலங்கை அரசிடம் இருக்கவில்லை. எனினும், இது குறித்தான விசாரணையை விதப்புரை வலியுறுத்தி நிற்கின்றது.

 உண்மை வெளிவரவேண்டும் என்ற விடயத்தில் சர்வதேச சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

தேர்தல்
சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாத நிலையிலேயே நாம் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். தேர்தல் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த விடயம் இருப்பது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

காணி அபகரிப்பு
சம்பூர், வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். ஆனால், உங்கள் செயற்றிட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

குடிப்பரம்பல் மாற்றம்
அதுமட்டுமல்லாது, வடக்கு, கிழக்கில் சில நபர்கள்மூலம் இனப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியம் ஆகியவற்றை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். இவற்றை இதற்கு முன்னரும் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்வாறான விடயங்களை நாம் ஆதாரபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றோம்.

தீர்வு
 உள்நாட்டில் தீர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் தோற்றுப்போயின. இதனால் உள்நாட்டுத் தீர்வு சரிவராது என்ற நிலைமை உருவாகியுள்ளது.

டட்லி சேனாநாயக்கா ஒப்பந்தம், 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஆகிய முயற்சிகளை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். இதே வேளை, 2006 ஆம் ஆண்டு சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்த போது, நியாயமானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்தியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு பஸில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் சென்றிருந்த வேளையிலும் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது நியாயமான அரசியல் தீர்வுக்கு 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் வழிகோலும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசு கூட்டமைப்பு பேச்சு
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த இருதரப்பு பேச்சுகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முடக்கமடைந்துள்ளன. இன்றுவரை பேச்சுகள் தொடராமல் உள்ளன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடவில்லை. அந்தக் குழு உறுதியானதாக கௌரவமானதாக இருக்கவேண்டும் என்றே சொல்கின்றோம்.

அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், அதன் மூலம் எட்டப்படும் தீர்வு நியாயமானதாக நீடித்து நிலைக்கக்கூடியதாக கௌரவமானதாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்  என்றார்