siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 டிசம்பர், 2012

ரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது

ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று கடல் சீற்றத்தின் காரணமாக கருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகருக்கு அருகில் உள்ள சிலே என்ற இடத்திலேயே இந்த கப்பல் மூழ்கியுள்ளது.
இந்த கப்பலில் 11 ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர். இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதே பகுதியில் வந்த மற்றொரு ரஷ்ய கப்பலும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. இந்த கப்பலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.{காணொளி, புகைப்படம்}
mmm

ஆளில்லா உளவு விமானத்தை கைப்பற்றியது??

 
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனால் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான விடயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம் என ஈரான் கூறிவருகிறது.
ஈரானின் பேச்சில் நம்பிக்கை இல்லாத அமெரிக்கா அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கின்றது.
இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதியில் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஈரான் கடற்படை பிடித்துள்ளது.
எப்போது பிடித்தது, எவ்வாறு பிடித்தது போன்ற தகவலை ஈரான் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டதும், சமீபத்தில் தங்கள் நாட்டு எல்லையில் பறந்த மற்றொரு விமானத்தை தகர்க்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது(வீடியோ இணைப்பு)

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இஸ்ரேலின் வீடு கட்டும் திட்டத்திற்கு ஜேர்மனி எதிர்ப்பு

பாலஸ்தீனியர் ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் நிலப்பகுதியில் 3000 புதிய வீடுகளைக் கட்ட இஸ்ரேலிய அரசு, அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஜேர்மனி எதிர்த்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீனியரிடமிருந்து அந்த நிலப்பகுதியைக் கையகப்படுத்திய பின்பே அங்கு கட்டுமானத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பாலஸ்தீனியரின் கைவசம் இருக்கும்போதே அங்கு வீடு கட்ட "டெண்டர்" விடுவது அடாத செயல் என்றும் இத்திட்டத்தை உடனே அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் ஜேர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் ஸீபெர்ட் கூறினார்.
இந்த வாரத்தில் ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஆக்கிரமிப்புப் பகுதி குறித்துப் பேச இருக்கின்றனர்.
இந்நிலையில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரைப்பகுதியில் அரசு யூதர்களுக்கான 3000 வீடுகளைக் கட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலனைத் தரும் என்றார் ஸீபெர்ட்.
இஸ்ரேல் தூதருக்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைப் போல ஜேர்மனியும் செய்யுமா என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளியும் கேள்வி எழுப்பிய போது ஜேர்மனிக்கு இஸ்ரேலியத் தூதரை அழைத்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
இந்த வாரம் பெர்லினில் நடக்கும் கூட்டத்தில் மெர்கெல் மற்றும் நெதான்யாகுவுடன் அவர்களின் அமைச்சரவை சகாக்களும் கலந்து கொள்கின்றனர்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகும் என்று ஸீபெர்ட் கூறினார்.
கடந்த வாரமே இஸ்ரேல், ஜேர்மனியிடம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐநா சபையில் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால் இஸ்ரேலின் விருப்பத்திற்கு மாறாகப் பாலஸ்தீனம் ஐநாவில் இடம்பெற்றுவிட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் இந்த வாரம் பெர்லினில் நடக்கும் பேச்சுவார்த்தையைக் கூட ரத்துச் செய்து விடலாம் என்று சில அதிகாரிகள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் புதிய ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

மெக்சிகோவில் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக என்ரிக் பெனா நெய்டோ பதவியேற்று கொண்டார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “யோ சோய் 132” எனப்படும் மாணவர்கள் இயக்கம் போராட்டம் நடத்தியது.
அப்போது பொலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்: அசாத்திற்கு ஒபாமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அசாத்திற்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, ஐநா தன்னுடைய முக்கியமல்லாத சர்வதேசப் பணியாளர்களிடம் சிரியாவை விட்டு வெளியேறுமாறு சொல்லிவிட்டது.
இதனால் ஐநாவின் நூறு பணியாளர்களுள் 25 பேர் இந்த வாரத்திற்குள் வெளியேறிவிடுவர்.
ஐநாவின் செய்தி நிறுவனமான ஐரின், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸில் நடைபெறும் மனித நேயப்பணிகளும் சிறிதுகாலம் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.
ஃபோர்ட் மெக் நேரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பேசிய ஒபாமா, லிபியாவில் இருக்கும் அணு ஆயுதங்களும் சிரியாவிலிருக்கும் ரசாயண ஆயுதங்களும் மற்ற இடங்களுக்குப் பரவமால் இருக்க நாங்கள் முயல்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் மோசமான ஆயுதங்களைக் கொண்டு 21ம் நூற்றாண்டை இருட்டாக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.
இன்று நான் ஆசாத்துக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தும் பெருங்குற்றத்தில் நீங்கள் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை நீங்களே பொறுப்பாக வேண்டும் என்றார்.
ஆனால் சிரியா அரசு ஒபாமாவின் ஊகத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
எந்த நிலையிலும் நாங்கள் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம். மேலும் எங்களிடம் அதுபோன்ற ஆயுதங்களையே கிடையாது என்று சிரியா தெரிவித்துவிட்டது.
சிரியாவில் பன்னிரெண்டு இடங்களில் அதிக விஷத்தன்மை உடையதும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்வதுமான ரசாயண ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிரியா ரசாயண ஆயுதங்களை, போர் விமானம் மற்றும் ஏவுகணை மூலமாகத் தனது இலக்கு நோக்கி தாக்க முடியும் என்று CIA அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் நியுயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசியபோது சிரியாவில் ஆற்றல் மிகுந்த ரசாயண ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க அரசு சில எதிர்பாராத திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறினார்.

புகலிடம் தேடி வந்த டுனீஷிய இளைஞர் சுட்டுக்கொலை ?

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் தரையில் விழுந்துகிடந்தார்.
அவரைப் பிழைக்க வைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
கொலை செய்ததாகக் கருதப்படும் இளைஞரைக் காவலர் கைது செய்தனர்.
புகலிட மையத்தில் இருப்பவர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர்.
தற்போது காவல்துறையும், விசாரணை அதிகாரிகளும் இக்கொலை பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர்

வடகொரியாவுக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு


வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது ராக்கெட்டை வருகிற 10ஆம் திகதிக்கும், 22ஆம் திகதிக்கும் இடையில் ஏவ திட்டமிட்டுள்ளது. இப்பணியில் வடகொரியா அதிகாரிகளுக்கு ஈரான் அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தற்போது ரஷ்யாவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா ராக்கெட் ஏவும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை கைவிடுவது ஏற்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 

திங்கள், 3 டிசம்பர், 2012

ஜப்பான் சுரங்க பாதை விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது

ஜப்பான் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானின் யமனாஷி மாகாணம் சுவோ எக்ஸ்பிரஸ் சாலையில் சசாகோ என்ற சுரங்க பாதை உள்ளது.
முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்க பாதையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும்.
விடுமுறை நாளான நேற்று காலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சுரங்க பாதையின் நடுவில் மேற்கூரை திடீரென இடிந்து கார்கள் மீது விழுந்தது.
இதனையடுத்து அடுத்தடுத்த வந்த வாகனங்கள் சுரங்க பாதைக்குள் மோதி தீப்பிடித்தன.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொலிசார் சுரங்க பாதைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதற்கிடையில் தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உள்ளே சிக்கிய வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது இன்று அதிகாலை மேலும் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுரங்க பாதையை பராமரிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் தான் சுரங்க பாதையை முழுவதுமாக சோதனை செய்தோம். அப்போது எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.{காணொளி, புகைப்படங்கள்}

மாவீரர் நெப்போலியனின் கடிதம் ஏலம்

மாவீரன் நெப்போலியன் தனது வெளிவிவகாரத்துறை அமைச்ருக்கு எழுதிய கடிதம் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு(2,43,500 டொலர்) ஏலம் போனது. பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் ரஷியப் படையெடுப்பின் போது, கடந்த 1812ஆம் ஆண்டு தனது வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹுயூகஸ் பெர்னார்ட் மாரெட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையை 22ஆம் திகதி காலை 3 மணிக்கு தகர்ப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
சங்கேத வடிவில் எழுதப்பட்ட இக்கடிதம் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.
இதனை பாரிஸைச் சேர்ந்த கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிக தொகைக்கு இக்கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை கடந்த 1804ஆம் ஆண்டு முதல் 1815ஆம் ஆண்டு வரை ஆண்டார். தனது 51வது வயதில் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள சிறையில் உயிர் துறந்தார்{புகைப்படங்கள்,}

பாகிஸ்தானில் இராமர் கோவில் இடிப்பு: இந்துக்கள் போராட்டம்


 
 
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள இராமர் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் போராட்டம் நடத்தினர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல கோவில்கள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ராம பிரான் கோவில இடிக்கப்பட்டது, மேலும் அக்கோவிலை சுற்றியுள்ள இந்துக்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.
அத்துடன் கோவிலில் சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை கட்டுமான நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற இந்துக்களை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் இந்துக்கள் இணைந்து கராச்சி பிரஸ் கிளப் அருகே நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தி உள்ளனர்{புகைப்படங்கள், }