siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 ஜூலை, 2012

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா பாலாபிஷேகம்



 

24.07.2012
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்வதைத் தொடங்கி வைக்கும் அதன் நிறுவனர் பங்காரு அடிக
மதுராந்தகம், ஜூலை 22: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்வதை பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
÷விழாவையொட்டி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு வேள்வி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
÷காலை 7 மணிக்கு சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சி அம்மனுக்குப் படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு வார்ப்பதற்காகக் கொண்டு வந்த கஞ்சி, கோயிலுக்கு எதிரே மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
÷காலை 10.30 மணிக்கு கோயிலின் கருவறைக்கு எதிரே வெள்ளியில் ஆன சுயம்பிற்கு பாலாபிஷேகம் செய்வதை பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார். வெள்ளியால் செய்த சுயம்பின் மீது ஊற்றப்படும் பால் கருவறையில் உள்ள சுயம்பின் மீது விழும்.
÷தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளால் சுயம்பிற்குப் பாலபிஷேகம் செய்தனர். திங்கள்கிழமை மாலை பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வர்.

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்


 

24.07.20ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம். (உள்படம்) திருத்தேரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆண்டாள்-ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் திருஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ஆண்டாளின் திரு அவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டாள் கோயில் திரு ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். உற்சவ நாள்களில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உற்சவப் பந்தலில் நடைபெறுகின்றன.
இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு அதிகாலையில் புஷ்பங்கி சேவை நடைபெற்றது. பின் தனித்தோளுக்கினியான்களில் கடக லக்னத்தில் சுவாமிகள் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. அங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், காலை 9.05 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது. தேரோட்டத்தை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியே சென்று பகல் 12.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது
.

காரைக்காலில் கருட பஞ்சமி: 7 பெருமாள்கள் வீதியுலா



 
24.07.2012
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் கருட சேவையில் ஒருசேர எழுந்தருளிய உற்சவர்கள்.
காரைக்கால், ஜூலை 23: கருட பஞ்சமியையொட்டி, காரைக்காலில் 7 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் திங்கள்கிழமை காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி, மகா தீபாராதனைக்குப் பின்னர் வீதியுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாத பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் ஆகிய 6 பெருமாள்கள் காரைக்கால் நகருக்கு பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர்.
காரைக்கால் வந்த பெருமாள்களை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, 7 பெருமாள்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.
மாலை சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி,திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், எல்லா பெருமாள்களும் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் ஒருசேர எழுந்தருளினர்.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இரவு கருட சேவை புரிந்த பெருமாள்களின் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான நிர்வாகம், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது


..
24.07.2012.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் நந்தன வருடம் 24.07.2012 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 26 நாள்களுக்கு பெருந்திருவிழா மிகவும் சிறப்புடன் பக்திப் பரவசத்துடன் இடம்பெறவுள்ளது.

24 ஆம் திகதிஇன்று   (செவ்வாய் கிழமை) காலை வி...சேட பூசை அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, அந்தணர்களின் வேதபாராயணம் காற்றுடன் பரந்து சங்கமிக்க, நாதஸ்வர தவில் கான மழை சொரிய பூக்கள் காற்றில் பறந்து கொடிச்சீலையை தழுவிச் செல்ல பூலோக கைலாசத்தில் கொடியேற்றப் பெருந்திருவிழா இடம்பெறவுள்ளது.

இனிதே ஆரம்பமாகி 26 தினங்கள் தொடர்ந்து இடம்பெறும். திருவிழாக்கள் விவரம்

*24.07.12 செவ்வாய்க் கிழமை கொடியேற்றம் பகல் 10-00
*02.08.12 வியாழக்கிழமை--- மஞ்சம் மாலை 5-00
*10.08.12 வெள்ளிக்கிழமை--- கார்த்திகை உற்சவம் மாலை 5-00
*12.08.12 ஞாயிற்றுக்கிழமை-- சந்தானகோபாலர் உற்சவம் காலை 7-00
*12.08.12 ஞாயிற்றுக்கிழமை--- கைலாசவாகனம் மாலை 5-00
*13.08.12 திங்கள் கிழமை--- கஜவல்லிமஹாவல்லி உற்சவம் காலை 7-00
*13.08.12 திங்கள் கிழமை--- வேல்விமானம் மாலை 5-00
*14.08.12 செவ்வாய்க் கிழமை--- தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7-00
*15.08.12 புதன் கிழமை சப்பரம்--- மாலை 5-00
*16.08.12 வியாழக் கிழமை தேர்--- காலை 7-00
*17.08.12 வெள்ளிக்கிழமை--- தீர்த்தம் காலை 7-00
*18.08.12 சனிக்கிழமை பூங்காவனம்--- மாலை 5-00
*19.08.12 ஞாயிற்றுக் கிழமை வைரவர்--- உற்சவம்

பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார, பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டும்.

ஆலய வீதியில் முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு, பொலிஸார் பிரிவு, சரணர் பிரிவு, பத்தர்கள் தொண்டு அமைப்புக்கள் என பலதரப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தை சூழவுள்ள மண்டபங்களில் விசேடநிகழ்வுகள் இடம்பெறக் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க

கிரெடிட் சுவிஸ் வங்கியின் CoCo பத்திர விநியோகிக்க தீர்மானம்

24.07.2012.
சுவிஸ் தேசிய வங்கி கடந்த மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிரெடிட் சுவிஸ் வங்கி CoCo எனப்படும் மாற்றக்கூடிய பத்திரங்களை Contingent Convertible bonds விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது தவிர சொத்து விற்பனையிலும், செலவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. வங்கியின் முதலீட்டைப் பெருக்கும் விதமாக 3.8 பில்லியன் மதிப்புடைய “கொக்கோ” பத்திரங்களை கத்தாரில் உள்ள ஒலாயன் குழுமத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள தெமாசெக் நிறுவனத்திற்கும் கிரெடிட் சுவிஸ் விநியோகிக்கும்.
இதன் மூலமாக 8.7 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவு முதலீட்டைப் பெருக்க வங்கி திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.7 பில்லியன் மதிப்பில் கலப்புப் பாதுகாப்புப் பத்திரங்களை விற்கவும் வங்கி திட்டமிட்டுள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி யூன் 14ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய பொருளாதாரத்தை நெருக்கடி நிலை கருமேகம் போல் சூழ்ந்திருப்பதால் சிறியதும் பெரியதுமான பல எச்சரிக்கைகளை தேசிய வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
ஐரோப்பாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை எதிர்த்து நிற்க இன்னும் முழுமையாக சுவிஸ் வங்கிகள் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதை தேசியவங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
கிரெடிட் சுவிஸ்ஸின் தலைமை நிர்வாகி பிராடி டோகன் தமது வங்கியின் பங்குகள் பாதிப்பைச் சந்தித்ததால் தேசிய வங்கி கூறியுள்ளபடி முதலீட்டைப் பெருக்கும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்.
கிரெடிட் சுவிஸ்ஸின் முதலீட்டைப் பெருக்க நடவடிக்கைகளை நேற்று தேசிய வங்கி வரவேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இனி திரும்பவும் கிரெடிட் சுவிஸ் தனது பழைய நிலையை அடையும் என்று நம்புவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

சுவிஸ்–ஜேர்மனி இடையே கருத்து வேறுபாடு

24.07.2012.
ஜேர்மன் அதிகாரிகள் சுவிஸ் வங்கியின் ரகசியங்களைக் குறுந்தகட்டில் வாங்கியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் பயனற்றதாகி விட்டது என சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் விட்மெர் ஷ்லும்ஃப் பிலிக்(Eveline Widmer-Schlumpf) பேட்டியின் போது தெரிவித்துள்ளார். விட்மர் ஷ்லும்ஃபிற்கும்(Eveline Widmer-Schlumpf) ஜேர்மனியின் நிதியமைச்சர் உல்ஃப்காங் ஷாபிளுக்கும்(Wolfgang Schauble) இடையே இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது.
நார்த் ரைன்–வெஸ்ட் ஃபேலியா மாகாணத்து வரி அலுவலர் 3.5 மில்லியன் யூரோவை இலஞ்சமாகக் கொடுத்து ஜுரிச்சில் கூட்ஸ் தனியார் வங்கியில் 1000 வரி ஏய்ப்பாளர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய குறுந்தகட்டைப் பெற்றனர். இந்தச் செய்தி வெளிவந்து சில நாட்கள் கழித்து பிலிக் பேட்டி நடந்தது.
விட்மர் ஷ்லும்ஃப், “இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது இதுபோன்ற குறுந்தகடுகளை வாங்குவதற்கு எவரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்” என்றார். இப்போது இருக்கும் சூழ்நிலை தற்காலிகமானது விரைவில் இந்நிலை மாறும் என்றார்.
ஜேர்மனியின் ஷாபிள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒப்பந்தத்தில் இதுபோன்ற குறுந்தகடுகளை வாங்கக்கூடாது என்று விதிமுறை எதுவும் சேர்க்கப்படவில்லை என்றார்.
இவ்வாறு இரு அமைச்சர்களும் தமது முரண்பாடான கருத்தக்களை அறிக்கைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்

நவீனமயமாக்கப்பட்ட சுவிஸ் ரயில்வே நிலையம்

24.07.2012.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து அட்டவணைகள் முறைப்படுத்தப்பட்டு, காலத்திற்கேற்ப சுவிஸ் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. புதிதாக ரயில்வே நிலையங்களில் கடைகள் பெருகி வருவதால் பலர் சுற்றிப் பார்க்க மட்டும் வருகின்றனர் பொதுவாக அவர்கள் ரயில்களில் பயணிப்பதில்லை.
ஒவ்வொரு நாளும் ஜுரிச்சின் முக்கிய ரயில்நிலையத்தில் மூவாயிரம் ரயில்கள் வந்து போகின்றன. உலகத்தின் பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று என்பதால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இங்கு தினமும் கடந்து செல்கின்றனர்.
2030க்குள் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் 45% அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ரயில் நிலையங்கள் தனது அதிகபட்ச கொள்ளவை அடைந்துவிட்டன. இப்போது மக்கள் கூட்டமும் நெருக்குகின்றது.
இந்த மக்கள் கூட்டம் பெரிய பிரச்னை அல்ல, ரயில்களின் கால அட்டவணையும், ரயில் நிலையத்தில் உள்ள மதுக்கட்டிடம், உணவுவிடுதி பெருகிவிட்டதே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாகும் என்று ஜுரிச்சில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் உல்ரிக் வீட்மன் தெரிவித்துள்ளார்.
அட்டவணைகளும், அங்காடிகளும் மக்களை எந்த நேரமும் வந்து போகச் செய்யும் இடமாக ரயில்நிலையத்தை மாற்றிவிட்டது. பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் இவை ஊருக்கு நடுவே இருப்பதால் அதிகக் கூட்டம் வருகின்றது.
கடந்த இருபதாண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கையும், வசதிகளும் பெருகியது போல பயணிகளின் மனநிறைவும், எண்ணிக்கையும் பெருகிவிட்டன என்றார் வீட்மென்

சட்டவிரோதமாக இளைஞனை துன்புறுத்திய பொலிசார் பணிநீக்கம்

24.07.2012
லாசன்னா பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரை சுவிஸ் நீதிமன்றம் பணி நீக்கம் செய்துள்ளது. சட்ட விரோதமாக 16 வயது இளைஞனை குற்றத்த பொலிஸ் அதிகாரிகள் தண்டித்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு தெருவில் பாதுகாப்பின்றி இருந்த இனளஞனை பொலிசார் காவலில் வைத்து விசாரித்துள்ளர். அதன் பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இளைஞனை சட்ட விரோதமாக துன்புறுத்தியுள்ளனர்.
சுவிஸ் நீதிமன்றத்தில், நீதிபதியிடம் குறிப்பிட்ட இளைஞன் தெரிவிக்கையில் அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று மிளகு பொடி கலந்த தூளை போத்தலில் அடைத்து, முகத்தில் தெளித்ததாக தெரிவித்தான். லாசன்னா பொலிசாருடன் வனப்பகுதி பொலிசார் மூவர் இருந்தாகவும் தெரிவித்தான்.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த இளைஞன் 18 வயது நிறைவு பெறாத மைனர், மேலும் அவனை பொலிசார் பாதுகாப்புடன் வீட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும்.
அதை செய்ய தவறியதுடன், இனளஞனை துன்புறுத்திய குற்றத்திற்காக இரண்டு பொலிசாரும் அவர்களது பணியிலிருந்து நீக்கப்படுவதாக சுவிஸ் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

24.07.2012.
சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார். RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது.
மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்குப் பலனளிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் 1½ வயதுக் குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16,000 பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப்பேருக்கு நோய் தீர்ந்துவிட்டது.
இருபது வகையான மருந்துகளைக் கொடுத்துச் சோதித்தில் இந்த RTS, S என்ற மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. இதற்காகப் பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர்.
மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான்.
இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அளிக்கின்றது. இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.
இந்த மருந்தை ஆண்டுதோறும் செலுத்தி வந்தால் மலேரியா தாக்காது. இன்னும் இதனை தீவிரமாக ஆராய்ந்து பரிசோதித்து திறன்மிகு, தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

புகலிடம் நாடுவோரின் நிலையை கண்டறிய அரசு தீவிரம்


24.07.2012.புகலிடம் நாடுவோரை அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க மேற்கொள்ளப்பட்ட டப்ளிங் மாநாட்டில் 2011 ல் சுவிஸ் கையெழுத்திட்டது.
இதில் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்வோரில் 1700 பேர் பற்றிய விபரம் தெரியவில்லை. டப்ளிங் கொள்கைபடி தாயகத்திற்கு திரும்புவோருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் குறித்து சட்டபூர்வமாக வசதியை ஏற்படுத்தி தருவதாகும்.
இதன் படி சுவிஸ் மையப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் புகலிடம் நாடுவோரை அருகில் உள்ள ஐரோப்பியாவின் 20 நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டது.
திட்டப்படி அனுப்பப்பட்ட 7000 பேர்களில் 1700 நபர்களின் நிலைமை மற்றும் அவர்களின் ஆவணங்கள் குறித்த தகவல் காணவில்லை.மேலும் இது குறித்த விரிவான தகவல்களும் இது வரை கிடைக்கப்பெறவில்லை