|
|
|
24.07.2012. |
பயணிகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து அட்டவணைகள் முறைப்படுத்தப்பட்டு,
காலத்திற்கேற்ப சுவிஸ் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
புதிதாக ரயில்வே நிலையங்களில் கடைகள் பெருகி வருவதால் பலர் சுற்றிப் பார்க்க
மட்டும் வருகின்றனர் பொதுவாக அவர்கள் ரயில்களில் பயணிப்பதில்லை.
ஒவ்வொரு நாளும் ஜுரிச்சின் முக்கிய ரயில்நிலையத்தில் மூவாயிரம் ரயில்கள் வந்து
போகின்றன. உலகத்தின் பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று என்பதால் சுமார்
ஒரு மில்லியன் மக்கள் இங்கு தினமும் கடந்து செல்கின்றனர்.
2030க்குள் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் 45% அதிகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. பல ரயில் நிலையங்கள் தனது அதிகபட்ச கொள்ளவை அடைந்துவிட்டன.
இப்போது மக்கள் கூட்டமும் நெருக்குகின்றது.
இந்த மக்கள் கூட்டம் பெரிய பிரச்னை அல்ல, ரயில்களின் கால அட்டவணையும், ரயில்
நிலையத்தில் உள்ள மதுக்கட்டிடம், உணவுவிடுதி பெருகிவிட்டதே கூட்ட நெரிசலுக்கு
முக்கிய காரணமாகும் என்று ஜுரிச்சில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியின்
பேராசிரியர் உல்ரிக் வீட்மன் தெரிவித்துள்ளார்.
அட்டவணைகளும், அங்காடிகளும் மக்களை எந்த நேரமும் வந்து போகச் செய்யும் இடமாக
ரயில்நிலையத்தை மாற்றிவிட்டது. பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் இவை ஊருக்கு நடுவே
இருப்பதால் அதிகக் கூட்டம் வருகின்றது.
கடந்த இருபதாண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கையும், வசதிகளும் பெருகியது போல
பயணிகளின் மனநிறைவும், எண்ணிக்கையும் பெருகிவிட்டன என்றார் வீட்மென் |
|
0 comments:
கருத்துரையிடுக