siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

சுவிஸ்–ஜேர்மனி இடையே கருத்து வேறுபாடு

24.07.2012.
ஜேர்மன் அதிகாரிகள் சுவிஸ் வங்கியின் ரகசியங்களைக் குறுந்தகட்டில் வாங்கியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் பயனற்றதாகி விட்டது என சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் விட்மெர் ஷ்லும்ஃப் பிலிக்(Eveline Widmer-Schlumpf) பேட்டியின் போது தெரிவித்துள்ளார். விட்மர் ஷ்லும்ஃபிற்கும்(Eveline Widmer-Schlumpf) ஜேர்மனியின் நிதியமைச்சர் உல்ஃப்காங் ஷாபிளுக்கும்(Wolfgang Schauble) இடையே இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது.
நார்த் ரைன்–வெஸ்ட் ஃபேலியா மாகாணத்து வரி அலுவலர் 3.5 மில்லியன் யூரோவை இலஞ்சமாகக் கொடுத்து ஜுரிச்சில் கூட்ஸ் தனியார் வங்கியில் 1000 வரி ஏய்ப்பாளர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய குறுந்தகட்டைப் பெற்றனர். இந்தச் செய்தி வெளிவந்து சில நாட்கள் கழித்து பிலிக் பேட்டி நடந்தது.
விட்மர் ஷ்லும்ஃப், “இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது இதுபோன்ற குறுந்தகடுகளை வாங்குவதற்கு எவரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்” என்றார். இப்போது இருக்கும் சூழ்நிலை தற்காலிகமானது விரைவில் இந்நிலை மாறும் என்றார்.
ஜேர்மனியின் ஷாபிள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒப்பந்தத்தில் இதுபோன்ற குறுந்தகடுகளை வாங்கக்கூடாது என்று விதிமுறை எதுவும் சேர்க்கப்படவில்லை என்றார்.
இவ்வாறு இரு அமைச்சர்களும் தமது முரண்பாடான கருத்தக்களை அறிக்கைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக