siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்


 

24.07.20ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம். (உள்படம்) திருத்தேரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆண்டாள்-ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் திருஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ஆண்டாளின் திரு அவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டாள் கோயில் திரு ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். உற்சவ நாள்களில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உற்சவப் பந்தலில் நடைபெறுகின்றன.
இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு அதிகாலையில் புஷ்பங்கி சேவை நடைபெற்றது. பின் தனித்தோளுக்கினியான்களில் கடக லக்னத்தில் சுவாமிகள் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. அங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், காலை 9.05 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது. தேரோட்டத்தை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியே சென்று பகல் 12.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது
.

0 comments:

கருத்துரையிடுக