siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

கிரெடிட் சுவிஸ் வங்கியின் CoCo பத்திர விநியோகிக்க தீர்மானம்

24.07.2012.
சுவிஸ் தேசிய வங்கி கடந்த மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிரெடிட் சுவிஸ் வங்கி CoCo எனப்படும் மாற்றக்கூடிய பத்திரங்களை Contingent Convertible bonds விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது தவிர சொத்து விற்பனையிலும், செலவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. வங்கியின் முதலீட்டைப் பெருக்கும் விதமாக 3.8 பில்லியன் மதிப்புடைய “கொக்கோ” பத்திரங்களை கத்தாரில் உள்ள ஒலாயன் குழுமத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள தெமாசெக் நிறுவனத்திற்கும் கிரெடிட் சுவிஸ் விநியோகிக்கும்.
இதன் மூலமாக 8.7 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவு முதலீட்டைப் பெருக்க வங்கி திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.7 பில்லியன் மதிப்பில் கலப்புப் பாதுகாப்புப் பத்திரங்களை விற்கவும் வங்கி திட்டமிட்டுள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி யூன் 14ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய பொருளாதாரத்தை நெருக்கடி நிலை கருமேகம் போல் சூழ்ந்திருப்பதால் சிறியதும் பெரியதுமான பல எச்சரிக்கைகளை தேசிய வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
ஐரோப்பாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை எதிர்த்து நிற்க இன்னும் முழுமையாக சுவிஸ் வங்கிகள் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதை தேசியவங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
கிரெடிட் சுவிஸ்ஸின் தலைமை நிர்வாகி பிராடி டோகன் தமது வங்கியின் பங்குகள் பாதிப்பைச் சந்தித்ததால் தேசிய வங்கி கூறியுள்ளபடி முதலீட்டைப் பெருக்கும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்.
கிரெடிட் சுவிஸ்ஸின் முதலீட்டைப் பெருக்க நடவடிக்கைகளை நேற்று தேசிய வங்கி வரவேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இனி திரும்பவும் கிரெடிட் சுவிஸ் தனது பழைய நிலையை அடையும் என்று நம்புவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

0 comments:

கருத்துரையிடுக