siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழா



 


24.07.2012.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பவானி அம்மன்.
கும்மிடிப்பூண்டி, ஜூலை 22: கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பவானி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாவின் முதல் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 75 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் திரண்டனர்.
இந்த ஆண்டு ஆடி திருவிழாவை, நடத்தும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், பவானி அம்மன் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் சேது ரத்தினம்மாள் மற்றும் எல்லாபுரம் ஒன்றியக் குழுவின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் அவரவர் வேண்டுதலின்படி முடி காணிக்கை, கோழி, ஆடு வெட்டி காணிக்கை செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், வேப்பஞ்சேலை காணிக்கை ஆகியவைகளை செலுத்தி கோயில் வளாகத்தில் உள்ள பொங்கல் வைக்கும் மண்டபத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த நிலையில் அவர்கள் தங்குவதற்கு கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபம் மட்டுமல்லாது எல்லாபுரம் ஒன்றியக் குழு சார்பில்க ஒன்றிய அலுவலக வளாகத்தில் தாற்காலிக தங்கும் கூடார வசதிகள், மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
அதே போல பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கோயம்பேடு, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, குளிக்க வசதிகள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகன வசதிகளை எல்லாபுரம் ஒன்றியக் குழு சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசதிகளை அவ்வப்போது மாவட்டக் குழுத் தலைவர் பி.ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் அம்மிணி மகேந்திரன் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
200-க்கும் மேற்பட்ட போலீஸôரும், போக்குவரத்து போலீஸôரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக