24.07.2012 |
லாசன்னா
பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரை சுவிஸ் நீதிமன்றம் பணி நீக்கம் செய்துள்ளது. சட்ட
விரோதமாக 16 வயது இளைஞனை குற்றத்த பொலிஸ் அதிகாரிகள் தண்டித்த குற்றத்திற்காக பணி
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குடித்துவிட்டு தெருவில் பாதுகாப்பின்றி இருந்த இனளஞனை பொலிசார் காவலில் வைத்து
விசாரித்துள்ளர். அதன் பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இளைஞனை சட்ட விரோதமாக
துன்புறுத்தியுள்ளனர். சுவிஸ் நீதிமன்றத்தில், நீதிபதியிடம் குறிப்பிட்ட இளைஞன் தெரிவிக்கையில் அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று மிளகு பொடி கலந்த தூளை போத்தலில் அடைத்து, முகத்தில் தெளித்ததாக தெரிவித்தான். லாசன்னா பொலிசாருடன் வனப்பகுதி பொலிசார் மூவர் இருந்தாகவும் தெரிவித்தான். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த இளைஞன் 18 வயது நிறைவு பெறாத மைனர், மேலும் அவனை பொலிசார் பாதுகாப்புடன் வீட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறியதுடன், இனளஞனை துன்புறுத்திய குற்றத்திற்காக இரண்டு பொலிசாரும் அவர்களது பணியிலிருந்து நீக்கப்படுவதாக சுவிஸ் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் |
செவ்வாய், 24 ஜூலை, 2012
சட்டவிரோதமாக இளைஞனை துன்புறுத்திய பொலிசார் பணிநீக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக