siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

கப்பல் விபத்தில் சென்னை பொறியாளர் உயிரிழந்தது எப்படி



 

24.07.2012.
சென்னை, ஜூலை 23: பத்து மாதங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டில் நேரிட்ட கப்பல் விபத்தில் சென்னைப் பொறியாளர் உயிரிழந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் சேவியர் ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
எனது தந்தை சில்வஸ்டர் ராபர்ட் சேவியர் ராஜ் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் 12.7.2011 அன்று இரண்டாம் நிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
நைஜீரியாவில் கரையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 4.9.2011 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 5 சிப்பந்திகள் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் எனது தந்தை உடல் மீட்கப்படவில்லை. விபத்தின்போது இயந்திர அறையில் எனது தந்தை இருந்ததால், அவர் உடல் முற்றிலுமாக தீயில் எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நாங்கள் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எனது தந்தை மரணம் குறித்த எவ்விதத் தகவலையும் கப்பல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் இதுவரை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
ஆகவே நைஜீரியா கப்பல் விபத்தில் எனது தந்தை உயிரிழந்தது பற்றி விரிவான விசாரணை நடத்தி அது பற்றிய விவரத்தை எங்களுக்குத் தெரிவிக்குமாறு கப்பல் துறை தலைமை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, இது பற்றி 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக