siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா பாலாபிஷேகம்



 

24.07.2012
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்வதைத் தொடங்கி வைக்கும் அதன் நிறுவனர் பங்காரு அடிக
மதுராந்தகம், ஜூலை 22: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்வதை பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
÷விழாவையொட்டி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு வேள்வி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
÷காலை 7 மணிக்கு சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சி அம்மனுக்குப் படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு வார்ப்பதற்காகக் கொண்டு வந்த கஞ்சி, கோயிலுக்கு எதிரே மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
÷காலை 10.30 மணிக்கு கோயிலின் கருவறைக்கு எதிரே வெள்ளியில் ஆன சுயம்பிற்கு பாலாபிஷேகம் செய்வதை பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார். வெள்ளியால் செய்த சுயம்பின் மீது ஊற்றப்படும் பால் கருவறையில் உள்ள சுயம்பின் மீது விழும்.
÷தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளால் சுயம்பிற்குப் பாலபிஷேகம் செய்தனர். திங்கள்கிழமை மாலை பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வர்.

0 comments:

கருத்துரையிடுக