siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தைப் பார்க்கப் போனவர்களின் எண்ணிக்கை 12.5 மில்லியன்

31.08.2012.BY.rajah விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். கடந்த வாரம்...

இங்கிலீஷ் விங்கிலீஷ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதேவி

 Friday, 31 August 2012, BY-rajah. பாலிவுட்டில் உருவான இங்கிலீஷ் விங்க்லீஷ் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் விரைவில் வெளியாகிறது. இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதில் இல்லத்தரசியாக நடித்துள்ளார். கொலிவுட் பட நடிகை ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் வருகிறார். பாலிவுட் நட்சத்திர நாயகன் அமிதாப் பச்சன், தல அஜித் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கெளரி ஷிண்டே படத்தை இயக்கியுள்ளார்....

14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண்

31.08.2012.BY-rajah. அமெரிக்காவில் 14 வயதுப் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த...

கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர் சிறிலங்காக் கடற்படையினரால் கைது

31.08.2012.BY-rajah.கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர்கள் சிறிலங்காக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 25ம் நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில், சிறிலங்காக் கடற்படையினரால் 468 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.கடந்த 25ம் திகதி, திருகோமலைக் கடற்பரப்பில் வைத்து 65 தமிழர்கள் 36 சிங்களவர்களும், வடக்கு கடற்பரப்பில் மணற்காடு பகுதியில் 19...

இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம் { புகை படங்கள் இணைப்பு

    வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.   கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம் வாய்க்கால், புரவிப்பாஞ்சான் ஊடாக சென்று கிளிநொச்சி குளத்தில் தீர்த்தம் ஆடுவது வழக்கம். தற்போது பரவிப்பாஞ்சான்...

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய கடலோர கண்காணிப்பு

   வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக ராஜ்கிரன் என்ற கண்காணிப்பு கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடல் வழியாக கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோரகாவல் படை ஈடுபட்டு வருகிறது. இந்த...

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY.rajah. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். மேலும் தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மார்க்கெட்டின்...

செவிப்பறை வெடித்து இளைஞன் பலி : ஹெட் போனால் வந்த வினை

31.08.2012.BY-rajah. நற்பிட்டிமுனையில் கடந்த புதன்கிழமை (29.08.2012) இரவு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் செவிப்பறை வெடித்து உயிரிழந்துள்ளார்.மேற்படி சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் தனது லெப்டொப்பில் ஹெட்போனூடாக பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் ஹெட் போனுடேயே உறங்கியிருக்கிறார்.மறுநாள்...

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான்[ புகை படங்கள் இணைப்பு ]

31.08.2012.BY-rajah.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்!   வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக்...

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

செப்டம்பர் 7ஆம் திகதி வெளியாகிறது அரக்கோணம்

30.08.2012.BYrajah. ரமணா குடிபதியின் தயாரிப்பில் உருவான அரக்கோணம் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாகும். இதில் ஸ்ரீமன் கதாநாயகனாக நடிக்க, பிராச்சி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்னம்பலம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன் செட்டி, வாகினி, வெங்கல் ராவ் ஆகியோரும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளரான ரமணா குடிபதியும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார்....

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூஜையைக்கு ஹெல உறுமய விளக்கம்

  30.08.2012.BY.rajah,வடமேல் மாகாணத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கௌத்தம புத்தரின் தாதுக்கள் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது அதனால் அதே தினத்தில் மிருகபலி பூஜையை நடத்தப்படுவது என்பது பாவச் செயலாகும் அதனால் குறித்த பூஜையினை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 2ஆம் திகதி முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

தனி மனித அபிவிருத்தி என்பது யாழில் இல்லாத ஒரு பொருளாகிவிட்டது; யாழ்.பல்கலைக்கழக நூலகர்

30.08.2012.BY.rajah.   சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி என்பது பேசப்படாத ஒரு பொருளாகவே காணப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நூலகர் காந்தலட்சுமி அருளானந்தம் தெரிவித்தார். ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய டாவட்டங்ககைச் சேர்ந்த 46 நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையாளிக்கும் நிகழ்வும்...

யாழ்.நகரில் சுகாதார நடவடிக்கை புதிய திட்டங்களால் சீரமைப்பு; மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் தகவல்

30.08.2012.BYrajah. யாழ்.நகரின் சுகாதார நடவடிக்கைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சீரமைக்கப்படவுள்ளது என்று யாழ்.மாநகர சபை சுகாதாரக் குழுவின் தலைவர் எஸ்.விஜயகாந்த் நேற்றுப் புதன்கிழமை யாழ்.மாநகர சபையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார். சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு கட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை முதல் குப்பைகளை அகற்றும் பணி தினமும் காலையிலும் பிற்பகல்...

மட்டக்களப்பில் பஸ் விபத்து: 14 பேர் காயம்

30.08.2012.BYrajah. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்று கிரான்குளம் பகுதியில் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில்...

சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்

   வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah. யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய...

திருட்டு டிவிடியில் என் படத்தை பாருங்கள் – இயக்குனர் மிஸ்கின்!

30.08.2012.BYrajah.மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா,பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படமான முகமூடி ஆகஸ்டு 31-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.முகமூடி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மிஸ்கின் “முகமூடி படத்தில் எம்.ஜி.ஆர் பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறோம். எவ்வளவு அடி வாங்கினாலும் மறுபடியும் எழுந்துவந்து தர்மத்தை காப்பவர் தான் எம்.ஜி.ஆர். அதே போல் தான் முகமூடி படத்தின் கதாநாயகனும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது...

எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்

30.08.2012.BYrajah. அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகின்றது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்...

உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி

By.rajah. திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார். உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்கத்தொலைபேசியைக்...

ஆஸி செல்லமுற்பட்ட 39 பேர் ஒரு கோடியே 95 இலட்ச ரூபா பிணையில் விடுதலை

30.08.2012.BY.rajah. சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரில் 39 பேரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.௭ம்.௭ன்.பி. அமரசிங்க தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டார். பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் ஏனைய நால்வருக்கும் பிணை வழங்க மறுத்த...

அமெரிக்காவை மிரட்டும் ஐசக் சூறாவளி

30.08.2012.BYrajah.பிந்திய செய்தி அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாபிந்திய க 130 கி.மீ வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கத்ரினா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் 18 ஆயிரம்...

பல மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய அதிகாரி

30.08.2012.BY.rajah. சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 31.5 மில்லியன்...

தனது சக தோழியை சீப்பால் குத்திக் கொலை செய்த பெண்

30.08.2012.BY.rajah. லண்டனில் பரபரப்பான கடைத் தெருவில் 15 வயது இளம் பெண், சக தோழியை சீப்பால் கத்திக் கொலை செய்தார். மத்திய லண்டனில் உள்ள பிம்லிகோ பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா டோக்லாஸ்(வயது 15). கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னி பகுதியை சேர்ந்தவர் ராவுப்பின் மகள் ஜூலி. இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். கடந்தாண்டு மே 7ஆம் தேதி தெற்கு லண்டனில் பாட்டர்சீ பகுதியில் உள்ள பால்கன் சாலையில்...

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

30.08.2012.BY.rajah.புகை படங்கள் காணொளி கள் . கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது. இசாக் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது. தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இப்புயலால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இப்புயல் வீசியதால்...