siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 29 டிசம்பர், 2014

ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி? ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை கூறி உள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘‘உளவுத்துறையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம்  என்று...

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தனக்குதானே தீ வைத்துக்கொண்ட பெண்

பிரான்சில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்லேட்யூஸ் நகரின்போவ்லோன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வயது மகள் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த போது வீட்டு முற்றத்தில் 30 வயது பெண் தீ மூட்டிக்கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் சடலத்தை கண்டுபிடித்து அது பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இங்குஅழுத்தவும்...

சனி, 20 டிசம்பர், 2014

கியூபா அமெரிக்கா வுக்கு 50 ஆண்டுகளின் பின் மலரும் உறவு!

1962ம் ஆண்டுக்குப் பின் முற்றாக முறிந்துபோன அமெரிக்கா - கியூபா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. கியூபாவில் 5 வருடங்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 65 வயதான க்ரோஸ் என்ற புலனாய்வாளர் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கியூபாவுடன் தூதரக உறவு மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் வலைதள பணிகளை  மேற்கொள்வதற்காக 2009ம் ஆண்டு 65...

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனைவியை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த நபர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் முன்னாள் கணவர் உள்பட 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து மாநில அரசிடம் கேட்டால் மீடியாக்கள் உத்தர பிரதேசத்தை மட்டுமே உற்று நோக்குவதாக கூறுகிறது. இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கட்டைச் சேர்ந்தவர்...

பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை

தலீபான்கள் அட்டூழியம் ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளம் உள்ளது. அதன் அருகில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் நேற்று கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே மோட்டார் சைக்கிள்களில் வந்த தலீபான் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு...

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

10 விமானங்கள் புதிதாக கொள்வனவு...

 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 26 நவம்பர், 2014

தன்து இறந்ததாயை தோண்டி எடுத்த மகன்

தற்போது, உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு போட்டோ பாணி செல்ஃபி… தினமும், பல்துலக்குவது, குளிப்பது போன்று அன்றாட வாழ்வில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது இந்த செல்ஃபி. இந்நிலையில், சிலர் தனித்துவமான செல்ஃபி எடுப்பதற்காக உயிரை பணையம் வைத்து ஆபத்துகளில் இறங்குவது, வினொதமாக யாரும் செய்யாத ஒன்றை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படித் தான் ஆர்வக்கோளாரில் லெபானனைச் சேர்ந்த நபர் ஒருவர், இறந்த தன் தாயை தோண்டி எடுத்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். லெபனானில்...

திங்கள், 24 நவம்பர், 2014

சீன விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை

தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் “மங்கள்யான்':“டைம் இதழ் புகழாரம்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் “மங்கள்யான்’ இடம்பெற்றுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்காவால் முடியவில்லை. ரஷியாவாலும், ஐரோப்பாவாலும்கூட முடியவில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச்...

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர்:??

கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை...

வியாழன், 20 நவம்பர், 2014

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை

 பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸின் பாரிஸ் (Paris) நகரில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் (Necker hospital), கருவில் உள்ள 5 மாத குழந்தை ஒன்றிற்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஸ்பினா பிஃபிடியா (spina bifida) என்ற பிறப்பு குறைபாடு நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். குழந்தையின் மூளையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சை செய்த...

ஞாயிறு, 16 நவம்பர், 2014

உடலில் வளரும் நகங்கள்: விசித்திர நோயால் திண்டாடும் பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலில் முடிக்கு பதிலாக நகங்கள் முளைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பகுதியை சேர்ந்த ஷானைனா இசோம் (32.அ). கடந்த ஐந்து ஆண்டுகளாக வித்தியாசமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். தோலில் முடிகள் முளைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நகங்கள் முளைத்துள்ளன. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆஸ்துமாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அளவுக்கு அதிகமான ஸ்டீராய்ட்...

வியாழன், 13 நவம்பர், 2014

தூதரகத்துக்கு 24 மணி நேரத்தில் 3 மர்ம பார்சல்!

நியூசிலாந்து நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை மர்ம பார்சல் வந்துள்ளது. அதில் வெடிகுண்டுகள் அல்லது எபோலா கிருமிகள் இருக்குமோ என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமெரிக்க தூதரகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 6 மணியளவில் மர்ம பார்சல் வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையும் 2 மர்ம பார்சல்கள் வந்துள்ளது. இந்த பார்சல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த 3...

ஞாயிறு, 9 நவம்பர், 2014

குடிபோதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டி மகனுக்கு கார் ஓட்ட தடை

 இங்கிலாந்தில் குடி போதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டியின் மகனுக்கு அபராதமும், கார் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. புகழ்பெற்ற இங்கிலாந்து வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி. இவரது மகன் ஷபார்ருஷ்டி (35). இவர் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 1–ந்தேதி ஹம்ப்ஸ்டட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார். அதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது....

சனி, 1 நவம்பர், 2014

குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்

சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக குத்தினான். இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு குழந்தையை பரிதாபமாக இழந்தது. மேலும் 2 குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பஸ் விபத்தில் 9 பேர் பலி, 17 பேர் காயம்

  அசாம் மாநிலம் நாகோனில் அரசு பஸ் விபத்துக்குள் சிக்கியதில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அசாம் போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் ஒன்று லாகிம்பூரில் இருந்து தலைநகர் கவுகாத்திக்கு சென்றுக் கொண்டிருந்தது. நாகோன் அருகே பஸ் வேகமாக சென்றபோது பாலத்தில் மோதி விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

சனி, 25 அக்டோபர், 2014

நாடுகளில் இருந்து பலவண்ண பறவைகள் ஒரிசாவுக்கு வருகை

சைபீரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பலவண்ண பறவைகள் இடம்பெயர்ந்து தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க ஒரிசாவின் சிலிக்கா ஏரிக்கு வந்துள்ளன. முதலில் குறைவான பறவைகள் வந்தன. பின்னர் பறவையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சிலிக்கா ஏரி 1,100 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும். அது பறவை மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் இடமாக கருதப்படுகிறது. சுமார் 10 லட்சம் புலம்பெயர்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

காணொளியைப் பார்த்த கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் கண்ணீர் விட்டார்!!

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜேம்ஸ் பெக்கர், ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை வெளிப்படுத்தும் த நோ பயர்சோன் காணொளியை பார்த்து கண்ணீர்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரவுன் இன்டர்நெசனல்ஸ் என்று மிகப்பெரிய சூதாட்ட மையத்தின் சொந்தகாரரான ஜேம்ஸ் பெக்கர், சிறிலங்காவில் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கெசினோ ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரை நோ பயர் சோன் காணொளியை பார்வையிட்டு, சிறிலங்காவையும்,...

செவ்வாய், 14 அக்டோபர், 2014

இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கப்பல் அன்பளிப்பு..

ஜப்பானிய அரசாங்கம் தொள்ளாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கப்பல் ஒன்றை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) மூலம் இந்தக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 50 மீட்டர் நீளம் கொண்டது. 624 தொன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடியது. பல்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கப்பலுக்கு சயுர என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், மீன்பிடித்துறை...

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எபோலா நோய் சிகிச்சை அளித்த நர்சுக்கு தாக்கியது

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயினை சேர்ந்த மத குருக்கள் மானுவேல் கார்சியா வியஜோ மற்றும் மினகல் பஜாரஸ் ஆகியோர் எபோலா நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களில் மானுவேல் கார்சியா வியஜோவுக்கு சியாரா லோனிலும், மினகல் பஜாரஸ்க்கு லைபீரியாவிலும் எபோலா...

திங்கள், 22 செப்டம்பர், 2014

படிப்புக்கு மாணவர்களுக்கு உதவும் பிச்சைக்கார தாத்தா!

சீனாவில் பிச்சைக்கார முதியவர் ஒருவர் 3 கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உதவுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் (Beijing) வசிக்கும் முதியவர் (65) ஒருவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். இவர் பிச்சை எடுக்கும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகத்தின் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், மாதம் தவறாமல் தான் பிச்சை எடுத்த பணத்தை...

வியாழன், 18 செப்டம்பர், 2014

பியர் போத்தில்கள் திருடிய குடிமகன்கள்

கனடாவில் 1300க்கும் மேற்பட்ட பியர்  பெட்டிகள் களவு போனதை தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் பிரபல பியர்  நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1300க்கும் மேற்பட்ட பீர் பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. இவை 25,000 டொலர்கள் மதிப்பு கொண்டவை ஆகும். மேலும் லொறி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த பியர் போத்தில்கள், உடைக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த திருட்டை அரங்கேற்றிய குடிமகன்களை...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

திக்குமுக்காடிய பல்கலைக்கழகம்

பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தோலோஸ் (Toulouse) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் சுமார் 1200 மாணவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறியுள்ளது. தற்போது பொதுமான ஆசிரியர்கள் நியமிப்பதற்கும், வகுப்பறைகள் கட்டுவதற்கும் அவகாசம் கேட்டுள்ளது. மேலும்...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பாரதி வித்தியால மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தால் கௌரவிப்பு!

அமெரிக்கத் தூதரகத்தின் அனுரணையுடன் கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட விசேட ஆங்கில பயிற்சி நெறியில் தேர்ச்சிபெற்ற 38 மாணவர்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பயிற்சி நெறியில் சிறப்பாகச் சித்தியெய்திய 38 மாணவர்களும் அவர்களுக்கு பயிற்சி வழங்கிய மூன்று...

வியாழன், 11 செப்டம்பர், 2014

விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டில் அமைக்க சீன திட்டம்!

சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும். சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில்...

வியாழன், 4 செப்டம்பர், 2014

பள்ளியில் படிக்கும் நண்பனை துரத்தி துரத்தி கத்தியால் குத்திய தமிழ் இளைஞன்:

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பனை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்வம் ஒன்று நடந்துள்ளது. பிரித்தானியாவின் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் (Sulaxssan) என்னும் 19 வயதான இளைஞன், தன்னுடன் பயிலும் 17 வயது மாணவன் டுஷான் சீனுவை (Dusan Sinu) தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் வேறு வீடு மற்றும் பள்ளிக்கூடம் என மாறிச் சென்றுள்ளார்கள். ஆனாலும் சுலக்ஷன் அவரை பின் தொடர்ந்துள்ளார்.சுலக்ஷன்,...

புதன், 3 செப்டம்பர், 2014

மாணவர்களுக்கு பயங்கரவாத காணொளி ஒளிபரப்பு: பரபரப்பு

பிரித்தானியாவில் பள்ளி கூடம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளிக்கும் விளம்பர படத்தின் காணொளி திரையிடப்பட்டத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரித்தானியாவின் பிர்பிங்கம் (Birmingham) நகரில் உள்ள பள்ளிகூடம் ஒன்றில் பயங்கரவாதியாக மாற வலியுறுத்தும் வகையில் காணொளி ஒன்று திரையிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பார்க்க கூடாத அளவிற்கு வன்முறை உள்ள காட்சிகள் வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மதத்தை பற்றி விளம்பரம் செய்த...

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நேர்ந்த கொடூரம் :சிறுமிக்கு நடந்தது என்ன? பொலிசார் விசாரணை !

 அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அர்லிங்டன்(Arlington) நகரை சேர்ந்த அவலின்(Avalin age - 5) என்ற சிறுமி பலத்த காயத்துடன் வீடு திரும்பியுள்ளார். இவர் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விழுந்து அடிபட்டதாக பள்ளி நிறுவனம் கூறி வரும் நிலையில், சிறுமியின் தாயார், தனது மகள் தாக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுப்பியுள்ளார். இதனை அடுத்து இவர் தனது மகளின்...

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீவிரவாதிகளுக்கு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் போர்ப் பயிற்சி!

 சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது �இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா� என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம்,...

சனி, 30 ஆகஸ்ட், 2014

பெருநட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்! விமான விபத்துக்களால்

இந்து சமுத்திரத்துக்கு மேலாகப் பறந்த வேளை, கடந்த மார்ச் மாதத்தில் விமானம் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பெரும் நிதி இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது. ஜூலையில் இரண்டாவது விமானம் ஒன்று யுக்ரெய்னில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, பயணத்துக்கான பதிவுகள் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததால், இந்த வருடத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் மேலும் இழப்பு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது....

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

குழந்தை பிறந்ததை 'ஆப்பிள்' ஸ்டைலில் விளம்பரமாக்கிய தந்தை

ஜேர்மனியில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் (Andreas Kleinke) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வலைத்தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன்...

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ரூபாய் ஒன்றரை கோடிக்கு விலைபோன ஆட்டுக்கிடா!

 ஆட்டு விந்துக்கு மவுசு பாருங்க!கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தினை குறைந்தபட்சம் 100 பவுண்டுகளுக்கு விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை...

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் (காணொளி)

அணு உலை நிலையங்களை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக இஸ்ரேல் வேவு பார்த்தும் வருகின்றது. இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் நட்டன்ஸ்...

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

எரிமலை வெடிக்கலாம் என்பதால் மக்கள் வெளியேற்றம்!

 ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான...

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார். அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க அரசு...

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

போதை வழக்கில் மகன்: வெட்கி தலைகுனிந்த ஜாக்கி சான்

பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி சான் (31), தைவான் சினிமா நடிகர் கெய் கோ (23) ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜெய்சி சான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜாக்கி...

புதன், 20 ஆகஸ்ட், 2014

அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை!

வீடியோ வெளியானதால் பரபரப்பு! ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால்...

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனிநாடாக பிரியக்கூடாது: அவுஸ்திரேலிய பிரதமர்

  ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து மக்கள் தனியாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு கோரும் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு பத்திரத்தில் சுதந்திர நாடாக மாறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் இல்லை என்ற வார்த்தைகள் மாத்திரமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம் என்ற புள்ளியிடலில் புள்ளியிட வேண்டாம் என அவுஸ்திரேலிய...

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலிய மருத்துவமனை மன்னிப்பு கோரியது.

    அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும்...