siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 30 மே, 2013

ஜயலத் ஜெயவர்தன எம்.பி. காலமானார்

 முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போதே அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.தே.கட்சி வட்டாரங்களும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன. ஏற்கனவே...

புதன், 29 மே, 2013

இடுப்பில் கட்டியிருந்த குண்டைடு ?

அல் கொய்தா தீவிரவாத இயக்டகத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா...

முயற்சித்தவருக்கு அதிர்ச்சி ??

பேயைக் கண்டறிவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த கமெராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கமெராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கமெராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக அவரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும்,...

குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய ?

பிறந்த தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 25 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை மருத்துவர்கள்  பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை துப்பறிவாளர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர். சந்தேக...

ஞாயிறு, 26 மே, 2013

. மனித உரிமை பேரவையின் 23 ஆவது கூட்டத்தொடர் திங்களன்று

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும்...

சனி, 25 மே, 2013

மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி

 துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள துருக்கி நாடு, மதச்சார்பற்ற நாடாக விளங்குகிறது. அந்நாட்டின் இளைஞர்கள் மதுபானங்கள் மீது ஆர்வம் கொள்வதைத் தடுக்கும் வகையில், மதுபான விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவைகளில் தினமும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மதுபானம்...

சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்

அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது. இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள்...

உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின்,.,

உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.அவர்கள் உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப் பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும்...

பாதியிலேயே தரையிறங்கிய விமானம்:

 பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். மான்செஸ்டர் நகரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன....

பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?

 ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பேற்றார்.6 மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர் குடிபெயரவில்லை.பிரதமரின் அரசு இல்லத்தில் ஆவி நடமாடுவதாகவும், அதன் காரணமாக அந்த இல்லத்துக்கு குடிபெயர அபே மறுத்து வருவதாகவும் புரளி நிலவுகிறது.இது உண்மையா? என எதிர்க்கட்சி உறுப்பினர்...

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச்

லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்ற கருத்தை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது. கொலையாளிகளிடமிருந்து முன்கூட்டியே வெளிப்பட்ட சமிக்ஞைகளை அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சம்பவ இடத்தில் பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இரண்டுபேரும் பிரித்தானிய எம்-ஐ-5 புலனாய்வுப் பிரிவினரால்...

வெள்ளி, 24 மே, 2013

தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார். குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் கண்டி...

ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இலங்கையர் மீது

பிரித்தானியாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான சுப்ரமணியம் என்பவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது...

விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா

    அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று செனட் உறுப்பினர்களிடம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.அப்போது முதன்முதலாக ராணுவ நடவடிக்கையில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். எதிரிகளைத் தாக்கும் வண்ணம், முறைப்படுத்தப்பட்ட ஆளில்லாத ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் நான்கு அமெரிக்கர்கள் பாகிஸ்தானிலும், ஏமனிலும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இது...

செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில்

ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டு செயலிழந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் ஒன்றின் மீது இந்த பெகாசஸ் செயற்கைக் கோள் மோதியதிலிருந்து அந்நாட்டின் விண்வெளி நிலையத்திற்கு சரியாக சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று அம்மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், தொடர்ந்து விண்வெளியில் சுற்றி வருவதால் அது பழுதடைந்தது குறித்து...

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர்?

லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஊல்விச் இராணுவ முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று பிசியான லண்டன் சாலையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலையாளியை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசார் பல்வேறு கோணங்களில்...

வியாழன், 23 மே, 2013

ராணுவ வீரர் தலை துண்டித்துக் கொலை

 .   லண்டனில், பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.பரபரப்பான லண்டன் சாலையில், ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்த இரண்டு மர்ம மனிதர்கள், அவரது தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர். அப்போது, இஸ்லாமிய மொழியில் அவர்கள் கத்தியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் பல பகுதிகளில் பாதுகாப்பு...

அமெரிக்க எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸýக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச் சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸýக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ""தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி'' மற்றும் ""வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்'' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது. தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்....

பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்?

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அருகே புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர் ராணுவ வீரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆயுதங்களுடன் வந்ததாக ராணுவ அதிகாரி சைமன் லட்ச்ஃபோர்டு தெரிவித்தார்.சம்பவம் நடைபெற்ற லண்டனின் தென்கிழக்கில்...

புதன், 22 மே, 2013

மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியுமான ஒருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதிவான் திருமதி சத்துரிக்கா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சிறுவர்...

தேவாலயத்தினுள் தற்கொலை!

பிரபல எழுத்தாளரும் கட்டுரையாளரும் தேசியவாதிகளால் பாராட்டப்பட்டவருமான Dominique Venner  இன்று மாலை 16h00 மணிக்கு Notre-Dame de Paris தேவாலயத்தினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவாலயத்தினுள் உள்ளேயும் வெளியேயும் உல்லாசப் பயணிகள் உட்பட ஆயிரத்து ஐநூறு பேர் உடனடியாகக் காவற்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தேவாலயத்தின் முதற்கட்டுக்கு அருகில் நின்று 78 வயதான இவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.   ...

செவ்வாய், 21 மே, 2013

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்:?

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில்...

6.0 அளவிலான நிலநடுக்கம்

ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.அந்நாட்டின் தீபகற்ப பகுதியான காம்சட்காவில் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணியளவில் இது ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோபவ்லோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை....

பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் ?

இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எல்லைப் புற துணைப்படையில் பணிபுரிந்த ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருடைய கணக்கில் பணம் இல்லை என்பதினால் வங்கி அதிகாரிகளிடம் அதிகப்பற்றில் (ஓவர்டிராப்ட்) பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதினால் ஏ.டி.எம்.ல்...

செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி:

  20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.  இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் 18 வயதான ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு...

ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற?

  அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திங்களன்று, மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் யுடாங் சூ(44), சிங் யாங்(31 ), யீ லீ (31)...

திங்கள், 20 மே, 2013

ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா:

 ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சோதனை வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது. வடகொரியாவின் இச்செயலுக்கு தென் கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, 3 ஏவுகணைகளை பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வடகொரியா நேற்று முன்தினம் ஏவியது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது...

விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு ,,

      விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக,...

ஞாயிறு, 19 மே, 2013

சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

   அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளார் என்று அவரது அப்பா ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார்....

சனி, 18 மே, 2013

ஐ.நாவுடன் முரண்டு பிடிக்கும்?

சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறதுஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவுக்கு செல்ல கோரிக்கை விடுத்த போதும், அது சிறிலங்கா அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை...

வெள்ளி, 17 மே, 2013

தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை:

ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து இவர் அளித்த ஊடகப் பேட்டியில், கணவர் இறந்த பின்னர் தனித்து வாழும் பெண்களால் தோட்டத்தைப் பராமரிக்க முடியாது, எந்த வேலையையும் செய்ய இயலாது, எதைச் சொன்னாலும் எரிச்சல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். துருக்கியிலிருந்து வந்திருக்கும்...

ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு ??

வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.ஆனால் அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்நிலையில் திடீரென 2012ம் ஆண்டு யூலையில் தனது மனைவியுடன் பொது மக்கள் மத்தியில் தோன்றி அதிர்ச்சியளித்தார். அதற்கு முன்னரே இத்தம்பதிக்கு 2010ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜனாதிபதி கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக...

கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டில், 986 தட்டுகள் இது போன்று தெரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. மேலும் முன்னர் இருந்ததைவிட, தற்பொழுது...

மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார். மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது...

விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த.,

பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.மூன்று மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் 18ம் திகதி அன்று நடைபெற்ற இந்தக் கொள்ளை, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாகும். விமானம் சூரிச்சுக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்கள்...

வியாழன், 16 மே, 2013

தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி:

எத்தனையோ விதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வித்தியாசமான நடனம் இது,சிலி நாட்டின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஜோடி ஒன்று தமது திறமையை காட்டியுள்ளது. இது வழமையைப் போன்று சாதாரண மேடை நடனம் அல்ல. முற்றிலும் மாறுபட்ட ஜிம்னாஸ்டிக் வகையிலான நடனம். அதுவும் இரு நீர்த் தொட்டிக்குள் இவர்கள் காட்டும் திறமை அபாரமானது. பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அவர்களின் திறமையைக் காண காணொளியை...

புதன், 15 மே, 2013

வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு

கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த 2012ம் ஆண்டில் சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கருதப்படும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 1,585 வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவற்றில் 15 வங்கிகளில் பரிவர்த்தனைகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதும்...

பாகிஸ்தான் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் கோட் லாக்பாத் சிறையில் 1400 கைதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.சிறை அதிகாரிகளின் விரோத மனப்பான்மையைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு தங்களை எழுப்பி சிறைக்குள் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்புவதாகவும், சிறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் போராடும் கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை அதிகாரிகள் முயற்சி...

பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ,..

பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்று அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஆகிறார்.இந்நிலையில் அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமா, நவாஸ் ஷெரீப்புடன் புகைப்படத்தில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், மே 11ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்கவுள்ள முஸ்லிம்...

தீவிரவாதிகளின் எழுச்சியால் அவசரநிலைப்

  ஆப்பிரிக்கா கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கெதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலவீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால், ஜனாதிபதி குட்லக் ஜொனாதன் நாட்டில் அவசரநிலைப் பிரகடனம்...

அறுவடைக்குச் செல்லும் நேபாள மக்கள்

உலகளாவிய அளவில் ஆண்மை எழுச்சியை அதிகரிக்கவல்ல அருமருந்தாக "வயாக்ரா" மாத்திரை கருதப்படுகிறது.இந்த மாத்திரைக்கு இணையான ஆண்மை சக்தியை தரக்கூடிய அறியவகை பூஞ்சை நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் விளைகிறது. ஆரம்பத்தில் கம்பளிப் பூச்சியின் உடலைப் பற்றி, சில நாட்களில் கம்பளிப் பூச்சியை அழித்துவிட்டு "யார்ச்சகும்பா" எனப்படும் இந்த பூஞ்சை வளரத் தொடங்குகிறது. இவ்வகை பூஞ்சைகளுக்கு சீனா, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. நீரில் இந்த...

செவ்வாய், 14 மே, 2013

தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளை

திருச்சி புத்தூர் பாரதிநகர் அருகே சர்ச் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்கண். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் கண்டோன்மெண்ட், தில்லைநகர் பகுதியில் பிரபல ஓட்டலும் நடத்தி வருகிறார். ரோட்டரி சங்கத்தில் தலைவராகவும் உள்ளார். ஜெய்கண் நேற்று முன்தினம் தனது மனைவி, மகன் மற்றும் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவரது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஜெய்கண்ணின் வீட்டுக்கு நேற்று காலை சென்றார்....

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் !

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் !  முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம்...

திங்கள், 13 மே, 2013

திறமையான தலைமை நிர்வாகி பதவி

சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார்.நிறுவனத்துக்கும் அவருக்கும் எந்தத் தகராறும் இல்லை, சுகாதாரக் காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா திரும்பப் போகிறாரா என்பதும் புரியவில்லை என்று சுவிஸ் செய்தி நிறுவனம் இவரைக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின்...

இன்ப சுற்றுலா சென்ற இளம் பெண் கொலை வழக்கு:

சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார்.அப்போது அவ்வழியே வந்த இயந்திரப்படகு இந்தத் தோணியை முந்திக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட உராய்வு காரணமாக அத்தோணி  தண்ணீருக்கள் கவிழ்ந்தது. இதில் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர். தண்ணீரில் விழுந்த அப்பெண்ணின் கால்கள் இயந்திரப்...

ஞாயிறு, 12 மே, 2013

7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் ?

மங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன.இந்நிலையில் மங்கோலியா அரசு, டைனோசரஸ் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இதனையடுத்து மங்கோலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்களை கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஒரு நாட்டின் கலாச்சார நலனை கொள்ளை அடிப்பவர்களையும், சதிகாரர்களின்...

தலைவரின் போட்டோ 30 இலட்சத்துக்கு ஏல விற்பனை..!

சீனாவின் மாபெரும் தலைவர் மாவோ ஷெடாங். சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் மரணம் அடைந்து 27 ஆண்டுகள் ஆகிறது.இந்த நிலையில் இவரது அரிய போட்டோ சீனாவில் நேற்று ஏலத்துக்கு விடப்பட்டது. அதை பலர் போட்டி போட்டு கூடுதல் தொகைக்கு கேட்டனர். முடிவில் ரூ.30 லட்சத்துக்கு அந்த போட்டோ ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும். அதை லூஷான் மவுன்டெய்ன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏலத்தில் எடுத்தத...

பால்மா இறக்குமதியை தடைசெய்யும்

நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை தடைசெய்வது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அண்மைக் காலத்தில் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஆராய்வு மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்த நியூஸிலாந்தின் இரண்டு அமைச்சர்கள் தமது பால்மாக்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை...