siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 30 நவம்பர், 2013

பிரான்சில் உயிரை விட்ட பிரித்தானிய தம்பதி

பிரான்சில் இரண்டு லாரிகளுக்கிடையே நசுக்கப்பட்டு 54 வயதுடைய பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட பிரான்ஸில் இன்று 11.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்தபோது இரண்டு லாரிகள் சடுதியாக நிறுத்தப்பட்டபோது எதிரே வந்த தம்பதியினர் பயணம் செய்த கார் நசுக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பிரித்த்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து...

எச்.ஐ.வி ஆராய்ச்சிக்காக மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கீடு

 எச்.ஐ.வி எனப்படும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்துவதற்காக கனடிய அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து கனடிய சுகாதாரத் துறை அமைச்சர் றொனா அம்ப்றோஸ் கூறுகையில், எச்.ஐ.வி-யை குணப்படுத்துவதற்காக அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் 5 ஆண்டுத் திட்டங்களுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,...

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஜனவரி 22ல் சிரியா அமைதி பேச்சுவார்த்தை

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனீவாவில் ஜனவரி 22-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்-கீ-மூன் திங்கள்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொ...

ஈரானுடன் 6 நாடுகள் ஒப்பந்தம்: சர்வதேச கச்சா எண்ணை விலை குறைவு

ஈரான் நாட்டுடன் ஜெனிவாவில் நடந்த 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அணு சக்தி குறித்து ஒரு  புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துசர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டாலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது...

ஈரானுடனான ஒப்பந்தம்: நெதன்யாகுவுடன் ஒபாமா பேச்சு

ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுப் பிழை என்றும், அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக்கொள்ள அது வழிவகை செய்யும் என்றும் பிரதமர் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால், மிக நெருக்கமான நட்பு நாடுகளான...

ஈரானில் பூமியதிர்வு; 8 பேர் உயிரிழப்பு

ஈரானில் இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஈரானிலுள்ள அணு மின் நிலையத்திற்கு அருகில்  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல...

வியாழன், 28 நவம்பர், 2013

ஜேர்மன் அரண்மனையில் பற்றி எரிந்த தீ

ஜேர்மன் நாட்டில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த ரெனேசான்ஸ் அரண்மனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரெனேசான்ஸ் அரண்மனையாது பல்லாயிரம் யூரோக்களால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்தாகும். இந்த அரண்மனையாது சரியான முறையில் பராமரிக்கப்படாததால் 1956ம் ஆண்டு பள்ளிக்கூடமாக சோவியத் ராணுவத்தினரால் மாற்றப்பட்டது. பின்னர் 1971ம் ஆண்டு அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அருங்காட்சியாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது....

முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி நீக்கம் - தேர்தலில் போட்டியிட தடை

வரி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர், நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் சிலர், அவரை நெல்சன் மண்டேலாவுக்கு இணையாகப் புகழ்ந்தாலும் அவரது நீக்கம் தவிர்க்க இயலாததாகிவிட்டது....

புதன், 27 நவம்பர், 2013

56 தாய்மார்கள் படுகொலை! பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதன்படி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும்...

செவ்வாய், 26 நவம்பர், 2013

கனடாவில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கனடாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கனடா நாடாளுமன்றத்தில் சீர்திருத்த ஆராய்ச்சியாளர் Howard Sapers சமர்பித்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 12,000 என்ற எண்ணிக்கையில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 15,000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிவாசி...

இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா

 இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர்...

திங்கள், 25 நவம்பர், 2013

ஜேர்மன் பத்திரிக்கையாளர் மர்ம மாயம்

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் எகிப்தில் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனில் ஹமீத் அப்தல் என்பவர் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். மேலும் இவர் 2009ம் ஆண்டில் இஸ்லாமியம் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் அல் அக்ரா பூங்காவில் அருகில் இருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார். இவர் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ...

உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை! மசூதிகளை இடிக்க உத்தரவு

உலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது.இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு...

திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு

சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக 'செஸ்னா' விமானத்தை வாடகைக்கு எடுத்தார். வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இயந்திரம்...

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை: நடிகை அதிரடி

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெறும் தகுதியில்லை என்று ஹாலிவுட் நடிகை சூசன் சாரன்டோன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சூசன் சாரன்டோன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்கள் விடுதலைக்காக ஒபாமா பெரும் சாதனைப் படைக்கவில்லை என்றும் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக படை வாபஸ் பெறாமல் உள்ளது எனவும் குற்றம்சாட்டினார். மேலும் அவருக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை என்று தாம் உணர்வதாக...

வியாழன், 21 நவம்பர், 2013

சச்சினின் சாதனையை முறியடித்த மும்பை மாணவன்

மும்பையில் உள்ள ஆசாத் என்ற பள்ளி மைதானத்தில் 1988 ஆம் ஆண்டு சச்சினும் அவரது பள்ளித்தோழர் காம்ப்ளியும், சேர்ந்து 664 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தனர். சச்சின் 326 ரன்களும், காம்ப்ளி 349 ரன்களும் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து அதே மைதானத்தில் மும்பை பள்ளிச்சிறுவன் ஒருவர் தனியொருவராக 546 ரன்கள் குவித்து சச்சினின் சாதனையை உடைத்துள்ளார். அந்த பள்ளி மாணவரின் பெயர் பிரிதிவ் ஷா. 15 வயதே ஆன இவர், ஹாரிஸ் ஷில்ட்...

புதன், 20 நவம்பர், 2013

பயங்கரம்: ஷாப்பிங் மால் கட்டிடம் திடீரென சரிந்தது

 தென் ஆப்ரிக்காவில் ஷாப்பிங் மால் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள், பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகருக்கு அருகே டோங்காத் என்ற இடத்தில் 200 மீற்றர் நீளத்திற்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று 100க்கும் மேற்பட்டோர் கட்டிட பணிகளை செய்து வந்தனர். மாலை 4 மணியளவில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி 4 பேர்...

புயலுக்கு 4ஆயிரம் பேர் பலி, 1600 பேரைக் காணவில்லை! -

அதிகாரபூர்வமாக அறிவிப்பு. பிலிப்பைன்ஸில் ஹையான் புயலுக்கு 4 ஆயிரம் பேர் பலியானதாகவும் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் என்றும் அந்நாட்டின் தேசிய பேரழிவு தடுப்பு மற்றும் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பிலிப்பைன்சில் ஏற்பட்ட  ஹையான் புயலை அடுத்து, 17 கனேடியர்கள் காணாமற்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தில் கனடியர்கள் கொல்லப்பட்டது, அல்லது காயமடைந்தது...

செவ்வாய், 19 நவம்பர், 2013

றொரண்டோ மேயரின் அதிகாரம் பறிப்பு

    கனடாவில் றொரண்டோ நகர மேயரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கனடாவின் றொரண்டோ நகர மேயர் ராப் போர்டின் சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1. அலுவலக பட்ஜெட் குறைக்கப்பட்டு மீதமுள்ளவைகள் 2013ல் உள்ள காலாண்டுக்கு மாற்றப்பட்டு, ஜனவரி 1ம் திகதி 2014 முதல் உதவி மேயரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகின்றது. 2. மேயரின் உதவியாளர் வேலைமாற்றம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட உள்ளார். 3. முதலில் பேசும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. 4....

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாரிக்கும் ஆளில்லா விமானம்

ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் தனது புதியவகை விமானம் ஒன்றை இன்று காட்சிக்கு வைத்தது. 30 மணி நேரம் வானில் வலம் வரக்கூடிய இந்த மிகப்பெரிய ஆளில்லா விமானம் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். அது இஸ்ரேல் வரை சென்று தாக்க...

புயலால் உருக்குலைந்த பிலிப்பைன்சுக்கு நிதியுதவி

சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் புயலுக்கு, நாடே உருக்குலைந்து விட்டது. தக்லோபான் நகரில் மின்சார அடியோடு துண்டிக்கப்பட்டதால் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிடது. இதனால் 3 ஜெனரேட்டர்களை இயக்கி நேற்று தெருவிளக்குகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கார்லோஸ் கூறுகையில், தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் மின்சாரம் கொடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நகர் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும்...

திங்கள், 18 நவம்பர், 2013

கடும் சூறாவளி : 5 பேர் பலி: நூற்றுக்கணக்கானவர்கள் காயம்

    அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன. ‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த...

திங்கள், 11 நவம்பர், 2013

தாயின் வயிற்றிலிருந்து மருத்துவரின் விரலை

மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ரான்டி அட்கின்ஸ்- அலிசியா அட்கின்ஸ் தம்பதிக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிவியா என பெயரிட்டுள்ளனர். மனைவிக்கு பிரசவம் நடந்த போது, ரான்டி உடனிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த குழந்தை, மருத்துவரின் கை விரலை அழகாக பிடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து...

சனி, 9 நவம்பர், 2013

துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 9 வயது மாணவனால் பரபரப்பு

 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 9 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்களிடம் காண்பிப்பதற்காக தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை, பாடசாலைக்கு எடுத்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.புதன்கிழமையன்று பாடசாலை வாகனத்தில் வந்த அந்த மாணவர், கையில் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்ட வாகன ஓட்டுனர் உடனடியாக பாடசாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த மாணவனை கைது செய்தனர்....

புதன், 6 நவம்பர், 2013

நானும் வந்தேன் கண்கள் ஈரமாக...

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤.... காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள்...

திங்கள், 4 நவம்பர், 2013

ரேபிஸ் நோய்த் தொற்று: 10 பேர் மருத்துவமனையில்

  பிரான்சில் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கடந்த வாரம் இரண்டு மாத பூனைக்குட்டி ஒன்று பாரிசுக்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இருந்து தத்தெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து இந்த பூனைக்குட்டி உயிரிழந்தது விட்டது, அப்போது தான் பூனைக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த பூனையுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்...

படகு கவிழ்ந்து மியான்மரில் பரிதாபம்: 62 பேர் பலி

 மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று பெண்கள்,  குழந்தைகள் உட்பட 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும், எதிர்பாராத விதமாக படகு சேதம் அடைந்தது. இதனால் கடல்நீர் புகுந்ததும், பாரம் தாங்காமல் நடுக்கடலில்...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

செட்டிபாளையம் பிரதான வீதியில் பாரிய விபத்து

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை. தனியார் பஸ் சாரதி...