siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 30 டிசம்பர், 2013

கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரபூர்வமாக அனுமதி!

 அமெரிக்காவில் முதல் முறையாக கொலராடோ மாகாணத்தில் கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டென்வர் உள்பட அந்த மாகாணம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் கஞ்சா விற்பனை தொடங்கப்பட உள்ளது. கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும் விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன. இரு பிரிவுக்கும் சேர்த்து இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.    கடந்த...

இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்

  அமெரிக்க இராணுவத்தில் ஆண்டு பாலியல் கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அரசுத் தகவல்களை ஆய்வு செய்ததில், கூடுதலாக 5000 பாலியல் முறைப்பாடுகள் வந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்பவர்களை பாலியல்...

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அதிகமாக சம்பாதிப்பவரா? 75 சதவீத வரி செலுத்துங்கள்

பிரான்ஸ் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறும் நபர்களிடம் 75 வீத வரியை வசூலிக்க பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது ஆண்டு வருமானத்தில் இருந்து 75 வீத வரி வசூலிக்கப்பட உள்ளது. வருடத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை சம்பளமாக பெறும் தனி நபர்களிடம் 75 வீதமான வரி வசூலிடும் சட்டத்தை பிரான்ஸ் அரசியலமைப்புச் சபையில் அந்நாட்டு ஜனாதிபதி பிரேன்கோசிஸ் ஹொல்லேடன் இந்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார். இதில்...

கடன் பெற்றுக் கொள்வது தொடர்பான கெடுபிடிகளில் தளர்வு

கியூபாவில் கடன் பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த கெடுபிடிகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் இலகு அடிப்படையில் கடன் பெற்றக்கெர்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகளிலிருந்து...

சனி, 28 டிசம்பர், 2013

அடுத்த 2 ஆண்டுக்கான நிதி திட்டத்தில் கையெழுத்திட்டார்

அமெரிக்காவில்  புதிய பட்ஜெட்க்கு ஒப்புதல் கிடைகாமல் கடந்த அக்டோபர் மாதம் அரசு நிறுவங்கள் முடங்கி கிடந்தனர். பலர் வேலை வாய்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்று ஒரு நிலை அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க அமெரிக்க அதிபர் ஒபாமா 2014-2015ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தில் கையொப்பம் இட்டார். இது குறித்து  அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகார சட்ட முன்மொழிவில் ஓபாமா கையொப்பமிட்டுள்ளார்....

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரதமருக்கு எதிரான வன்முறையில் போலீஸ்காரர் பலி - 48 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் போலீஸ்காரர் இறந்தார். மேலும் 48 பேர் காயம் அடைந்தனர். பிரதமருக்கு எதிராக போராட்டம் - தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலக வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி போராட்டம் நடந்து வருகிறது.     அதை ஏற்க...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.அனைவரையும் போலீஸ் நிலையம்...

இந்திய சிறுவன் துஷ்பிரயோகம்: இலங்கையர் மீது குற்றச்சாட்டு

 டுபாயில் 14 வயது இந்திய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியதாக இலங்கையைச்சேர்ந்த நீச்சல் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய், ஜுமேரியா கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் பயிற்சியளிக்கும் 23 வயதான இலங்கையைச்சேர்ந்த  நீச்சல் அதிகாரி 14 வயதான இந்திய சிறுவனை  வல்லுறவு செய்ததாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ் மொழிப்பெயர்ப்பு...

திங்கள், 23 டிசம்பர், 2013

மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது தாக்குதல்

தெற்கு சூடானில் மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தெற்கு சூடானில் ஜனாதிபதி சல்வா கீரின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், அங்குள்ள புரட்சி படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே நடந்து வந்த மோதல்கள் தீவிரமடைந்து உள்நாட்டு போராக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே தெற்கு சூடானில்...

சனி, 21 டிசம்பர், 2013

எல்லையை கடக்கும் கனடா மக்களுக்கு 5 டிப்ஸ்

 அமெரிக்காவிற்கு விடுமுறை காலத்தில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள கனடாவில் எல்லை பகுதி சேவை நிறுவனம் 5 டிப்ஸ்களை அளிக்கின்றது. இவ்விடுமுறை காலத்தில் எல்லையை கடப்போர் கவனிக்க வேண்டிய 5 குறிப்புகள்: 1. தங்களின் பிரயாண பத்திரங்களை தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும். 2. தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும். 3. வண்டியில் கொண்டு செல்லப்படும் பொருட்களை பற்றிய தகவல்கள் அறிந்திருக்க...

வியாழன், 19 டிசம்பர், 2013

நவற்கிரி வேள்ட் நியூஸ் : சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!...

நவற்கிரி வேள்ட் நியூஸ் : சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!...: சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு வாழவேண்டும் என்று துணை தூதரக தலைவராய் பதவியேற்றுள்ள டாம் மேட்லாக் தெரிவித்துள்ளார். சுவி.....

சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!

சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு வாழவேண்டும் என்று துணை தூதரக தலைவராய் பதவியேற்றுள்ள டாம் மேட்லாக் தெரிவித்துள்ளார்.சுவிஸ் நாட்டின் துணை தூதரக தலைவராக பிரிட்டிஷ் நாட்டின் டாம் மேட் லாக் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், சுவிஸ் நாட்டிற்கு புதிதாக குடியேறிய மக்கள் உடன் சுவிஸ் மக்கள் நட்புரவு வைத்துக்கொள்ள முயற்சியெடுக்க வேண்டும். தன் வேலை, தன் வாழ்க்கை என்ற எண்ணத்தை விடுத்து எல்லோரையும் சந்தித்து...

புதன், 18 டிசம்பர், 2013

துயர சம்பவத்தை ஏற்படுத்திய ஞாபகப்பரிசு

  பிரான்சில் இராணுவ வீரர் ஒருவர், ஞாபகார்த்த அடைளமாக வைத்திருந்த ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி சகவீரர் வைத்திருந்த ராக்கெட் எதிர்பாரவிதமாய் மாடியிலிருந்து கீழே விழுந்தது. இதில் வீரர் ஒருவர் தன் கால்களை இழந்தார், மற்றெரு வீரர் கேட்டும் திறனையும், மூன்றாவது வீரர் கால்களையும் இழந்து விட்டனர். இச்சம்பவம் நேர்ந்த போது அவர்கள் வசிக்கும் வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்தன,...

தூதரக அதிகாரிகளின் ஐடி கார்டுகளை திரும்ப

இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க  தூதரக அதிகாரிகளுக்கு அளித்துள்ள அடையாள அட்டைகளை திரும்ப தர வேண்டும் என்று மத்திய அரசு அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அடையாள  ...

செவ்வாய், 17 டிசம்பர், 2013

வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை - விமான போக்குவரத்து பாதிப்பு

 இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மலையான எட்னா, எரிமலையாக மாற்றமடைந்துள்ளது. ஐரோப்பாவிலேயே மிக தீவிரமாக உறுமிக்கொண்டிருக்கும் இந்த எட்னா எரிமலையின் முகத்துவாரம் ஆப்பிரிக்க புவி ஓடு மற்றும் யுரேசியா புவி ஓட்டிற்கும் இடையில் விலகும் விளிம்பின் மேல் 3350 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடந்த பலவாரங்களாக வெடித்து சிதறி எரிமலை குழம்பை கக்கிக்கொண்டிருக்கும் இந்த எரிமலை தற்போது சாம்பலை பீய்ச்சி அடித்து வருகிறது. பல கிலோ...

கனடாவில் எமனாக மாறிய இரும்பு துண்டு

கனடாவில் ஒன்பது வயது சிறுவனை இரும்பு கம்பி ஒன்று காவு வாங்கிய சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.கனடாவில் உள்ள தொழிற்சாலை பகுதியில் சிறுவன் மீது பெரிய இரும்பு துண்டு ஒன்று விழுந்ததால் அச்சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தரம் குறைந்த செயற்கை மார்பக! நிறுவன உரிமையாளருக்கு

செயற்கை மார்பக தயாரிப்பில் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு  4 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களது அழகுக்காகவும், நோயினால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்தவர்களும் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வதுண்டு. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் செயற்கை மார்பகங்களை தயாரிக்கின்றன. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அழகுசாதன நிறுவனம் ஒன்று தயாரித்து விற்பனை செய்த செயற்கை மார்பகங்களை சுமார் 65 நாடுகளைச்...

வெள்ளிகிழமை மற்றும் 13ம் திகதியில் அபாயம் ஏற்படுமாம்! ஜேர்மன்

 ஜேர்மன் மக்கள் வெள்ளிகிழமை மற்றும் 13 என்ற திகதி வரும் நாட்களில் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்வது அபாயகரமானது என கருதுவதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் 13 என்ற திகதி மற்றும் வெள்ளிகிழமை என தொடர்ந்து மூன்று முறை வந்ததால் மொத்தம் 1,197 மக்கள் கொலை மற்றும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர். 13 என்ற திகதியில் வரும் வெள்ளியன்று மட்டும் 1253 இறப்புகள் நிகழ்கின்றன .இந்நாளில் வாரயிருதி என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்....

சந்திரனில் தரையிறங்கியது; சோவியத்!!,

சீன விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது; சோவியத், அமெரிக்காவுக்கு அடுத்து சீனா சாதனை சீனாவின் விண்கலமொன்று இன்று சனிக்கிழமை வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. Chang'e 3 என இவ்விண்கலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரனில் விண்கலமொன்றை வெற்றிகரமாக தரையிறங்கிய மூன்றாவது நாடாகியுள்ளது சீனா. இதற்குமுன் சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மாத்திரமே இத்தகைய விண்கலங்களை சந்திரனில் இறக்கியுள்ளன. அத்துடன் 1976 ஆம் ஆண்டு சோவியத் விண்கலமொன்று...

சனி, 14 டிசம்பர், 2013

போராளிகளின் துப்பாக்கிச்சூட்டில் 18 தொழிலாளர்கள்

   கடந்த 2008 ஆம் ஆண்டில் ஈராக்கில் நடைபெற்ற இனவாதக் கலவரங்களே அந்நாட்டு வரலாற்றில் பெரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மீண்டும் தொடங்கியுள்ள இனக்கலவரங்களும்,வன்முறைகளும் அமைதியின்மையையும், பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துவதாக மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நேற்று மாலை தலைநகர் பாக்தாதிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள இமாம் வைஸ் என்ற நகரத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த...

பாகிஸ்தான் அரசு தனது நன்றிகெட்ட புத்தியை நிலைநாட்டியுள்ளது:

வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா. கடந்த 1971ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரின்போது இனப்படுகொலைகள் நடந்தன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்குற்றங்களில் ஈடுபட்டதாக மொல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்க்கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டதற்கு...

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மேயர் மீது குற்றம்சாட்டிய பத்திரிகையாளர்

ரொறொன்ரோவின் மேயர் றொப் வோட்டிற்கு எதிராக நகர சபை நிரூபர் டானியல் டேல் வழக்கு தொடரவுள்ளார். கோன்றாட் பிளாக்குடன் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் மேயர் வெளியிட்ட கருத்துரை இதற்கு காரணமென தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், மேயர் தன்னை சிறுவர்மீது பாலியல் கவர்ச்சி உள்ளவரென உட்கிடையாக கூறியுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று கூறியுள்ளார். ...

துரோகம் செய்த மாமனாரை தூக்கில் போட்டார் அதிபர்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னின், மாமனாரான, ஜாங் சொங் தேக், தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்டு நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றது, ஊழல் செய்தது, மோசமான நடத்தை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்கடங்காத அழிவுக்கு இட்டு செல்லக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் மீது நடந்த ஒரு விசேட ராணுவ தீர்ப்பாய விசாரணையில், அவர் தன் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார்.அவருக்கு...

வியாழன், 12 டிசம்பர், 2013

சீபாவை சீரமைக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

இந்து – லங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளமைப்பது பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த திருத்தமானது இலங்கைக்கு பாரிய அனுகூலமாக அமையும் என்று, முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சீ.பர்டினேன்டோ கூறுகிறார். சீபா எனப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு சார்பான சில விடயங்களை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில்...

புதன், 11 டிசம்பர், 2013

உலகின் முதல் போதைப்பொருள் சந்தைக்கு ஒப்புதல் அளித்த உருகுவே

உலகில் முதல் மரிஜுவானா தேசிய சந்தை அமைப்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று உருகுவே நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. செனட் சபையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 13 ஓட்டுகள் எதிராகவும், 16 ஓட்டுகள் ஒன்றுபட்ட ஆளும் பிராட் முன்னணிக்கு ஆதரவாகவும் விழுந்தன. உலகமெங்கும் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் போதைமருந்துப் பொருளை சட்டரீதியாக விற்பனை செய்ய முடிவெடுப்பதன்மூலம் உருகுவே அரசு ஒரு ஆபத்தான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கருதப்படுகின்றது. அடுத்த...

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கொலைகார நகரமாக மாறும் பாரீஸ்!!!

பிரான்ஸின் தலைநகரமான பாரிசும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிலுள்ள பிராங்க்ஸியும் குற்றங்களின் எண்ணிக்கையில் என்றும் ஒரே போல் உள்ளது என பிரான்ஸின் பொலிஸ் தலைமை அதிகாரி பிரடெரி பிசெனர்ட் தெரிவித்துள்ளார். வன்முறை செயல்களில் ஈடுபடுதல், சொத்துகளை தாக்கிடுதல், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல், நகரத்தில் பாதுகாப்பில்லாதிருத்தல் போன்றவை பிராங்க்ஸில் அதிகம் நிகழும். அதே போல் பாரிஸிலும் நடக்கின்றது என ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். இவரின் இவ்விமர்சனம்...

செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்

கல்விச் சபை உறுப்பினர் செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு ஆதரவு!  மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக...

சவுதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

 சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.அந்த வகையில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது ஷாகீர்கான். இவர் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பெருமளவில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்தார். அவரை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து...

விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்:

பிரெஞ்சு பாராளுமன்றம் விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  பிரான்சில் உள்ள 40 ஆயிரம் விலை மாதுக்கள் நைஜீரியா மற்றும் ரோமானியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாவர். இதனை கருத்தில் கொண்டு பிரெஞ்சு பாராளுமன்றம் விதித்துள்ள சட்டப்படி விலை மாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு 1500 யூரோக்கள் ( 2000 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். ஆனால் விலை மாதுக்களுக்கு தண்டனை கிடையாது என்று...

திங்கள், 9 டிசம்பர், 2013

தொடரும் பதற்றம்: தேர்தலை நடத்த பிரதமர் இணக்கம்

  தாய்லாந்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அடுத்த 60 தினங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இணக்கம் தெரிவித்துள்ளார்.யிங்லக் ஷினவத்ரா கடந்த 2011ஆம் ஆண்டு தாய்லாந்து பிரதமராகப் பதவியேற்றார். அவரது ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கடந்த இரு வார காலமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு...

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இந்தியருக்கு சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த நிதின் ரானா என்பவர் வாடகை கார் சாரதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி நள்ளிரவில் ரயில் நிலையம் அருகே 17 வயதுள்ள பாடசாலை மாணவி மதுபோதை மயக்கத்தில் நின்றார். இந்த மாணவி தனது நண்பர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த போதை மயக்கத்தில் தள்ளாடிய மாணவியை வழிப்போக்கர்கள் சிலர் நிதின் ரானாவின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். குறித்த கார்...

சனி, 7 டிசம்பர், 2013

ஒட்டுக்கேட்ட அமெரிக்கா 500 கோடி தொலைபேசி உரையாடல்களை

நாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது. அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோடிக்கணக்கான தொலைபேசிகளை அமெரிக்க உளவு அமைப்பு ஒட்டுக் கேட்டு வருவது தெரியவந்துள்ளது....

உலகில் முதல் சுற்றுச்சூழல் சுரங்கப்பாதை (காணொளி இணைப்பு)

உலகில் முதன்முறையாக சுற்றுச்சூழல் நட்பாக இருக்கும் சுரங்கப்பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள லியோன் நகரத்தில் இந்த பிரமாண்டமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையானது நடைபயணிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாதையில் பேருந்துகளும் விடப்பட வேண்டும் என்பதற்காக நான்கு எலக்ட்ரிக் பேருந்துகள் சோதனை ஓட்டத்திற்காக விடப்பட்டுள்ளன. இச்சுரங்கபாதையில் இசை வேலைபாடுகளை சேர்க்டன்...

வெள்ளி, 6 டிசம்பர், 2013

உணவுகளுடன் விண்வெளியில் கலக்கும் நாசா விஞ்ஞானிகள்

 பிரான்ஸ் உணவுகளுக்கு அமெரிக்க விண்வெளி நிலையம் நாசாவில் பலத்த வரவேற்பு அளிக்கப்படுகின்றன.பிரான்ஸ் நாட்டில் உள்ள ஹேனாப்பு என்ற உணவகத்தில் 25 வகை உணவுகளை நாசா ஆர்டர் செய்துள்ளது. இவ்வுணவுகளை சுத்தம் செய்து மெல்லிய அலுமினிய தகடுப்பெட்டிகளில் பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 25 வகையான உணவுகளை வீரர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாளன்று சுவைத்து கொண்டாடி வருகின்றனர்.                                    ...

என்னிடம் ஐபோன் இல்லையே! கவலையில் ஒபாமா

என்னால் ஒரு ஐபோன் கூட வைத்துக்கொள்ள முடியவில்லை என்று அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.ஒபாமா எப்போதுமே கருப்பு நிறத்திலான, பெரிய சைஸ் பிளாக்பெர்ரி கைப்பேசியை பயன்படுத்திவருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் ஐபோன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. எனவேதான் பாதுகாப்பு மிகுந்த பிளாக்பெர்ரியைப் பயன்படுத்துகிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகள்கள் சாஷாவும், மலியாவும் தமது ஐபோன்களுடன்தான் நாளில்...

புதன், 4 டிசம்பர், 2013

தற்கொலையை இணையத்தில் பரப்பிய வாலிபர்! கண்டு ரசித்த மக்கள்

கனடாவில் வாலிபர் ஒருவர் தனது தற்கொலை காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். மேலும் அதனை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப போவதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி தொடக்கத்தில் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவை குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே...

அமெரிக்காவில் இந்திய தம்பதி கைது

அமெரிக்காவில் உள்ள கென்துஸ்கி பகுதியில் இந்தியாவை சேர்ந்த அம்ரூத்லால் பட்டேல், அவருடைய மனைவி தாக்ஷாபென் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். இந்த தம்பதியர் அங்கு சாலையோர 4 'பாஸ்ட்புட்' உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.  அதில் பணியாற்ற இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அனுமதியின்றி அழைத்துச் சென்றதுடன் குறைந்த சம்பளமும் வழங்கியதாக கூறப்படுகிறது...

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அமெரிக்காவில் நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறை

 அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி (34). இருதய மருத்துவரான இவர், 3 மாகாணங்களில் 18 மருத்துவமனைகளில் மாறி மாறி பணி புரிந்தார். இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது அவரை பொலிஸார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோயை பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது....

ஜனாதிபதி போர்க்குற்றவாளி: நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் உட்பட்ட உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக சாட்சியங்களையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிரியாவின் ஜனாதிபதி அஸாத் மீது ஐக்கிய நாடுகள் நேரடியாக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும். ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி சிரிய உள்நாட்டு போரில் ஓரு லட்சம் பேர் பலியாகியு...