
2009ம் ஆண்டுக்கு முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல இடங்களில், இலங்கைப் படையின் ஆள ஊடுருவும் படையினர் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக இவர்களது தாக்குதல் விஸ்வமடு கிளிநொச்சி மற்றும், முல்லைத் தீவுக்குச் செல்லும் பாதைகளில் கூட நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளின் அதி உச்ச தலைவர்கள் நடமாடும் இப் பிரதேசங்களை புலிகள் கடுமையாகப் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் அப்பிரதேசங்கள்ல் அவ்வேளைகளில் ஆள...