siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 31 ஜூலை, 2012

இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம்இன்றுவிமலுக்கு பட்ட மழிப்பு விழாவும்

. 1.08.2012. இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம் இந்தசுதன்ந்திர நாளில் எல் லோர்க்கும்சகல சிறப்புடன் வாழஉங்களை வாழ்த்துகின்றது நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் நன்றி விமல் நன்றி இந்தசுதன்ந்திர நாளில் இவருக்கு இந்த நன்னாளில் பத்து இணையதள அதிபராகஇருப்பவரும்மற்றும் பத்துக்கும் மேல் பட்டஇணையதலத்திற்கு தலைமை வதித்து இரவு பகலாக உலைத்துஅரும் பாடு பட்ட சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும்...

துப்பாக்கி சூடு: இராணுவ வீரர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, கனடாவில் உள்ள பிராண்டன் நகரத்துக்கு அருகே மணிடோபாவின் தென்மேற்கில் உள்ள ஷைலோவில் ராணுவத்தளம் உள்ளது. இங்கு கிளாரென்ஸ் ஸ்டில் மேன் என்பவர் இரண்டு முறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார் என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறி்த்து இராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கப்டன் கிளாரென்ஸ் ஸ்டில்மேன் இரண்டுமுறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார், நான்குமுறை துப்பாக்கியை கவனமற்ற முறையில் பயன்படுத்தினார். மேலும்,...

வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இலங்கையின் வட மாகாணத்துக்கு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை, அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு நீக்கியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை சீரடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுகள்...

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்

  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, யாழ். அரியாலையின் முள்ளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ் வாள்வெட்டு...

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தின் கித்துள் காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடைய சாமித்தம்பி கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி...

யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பன இன்று செவ்வாய் அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது...

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் அழிவடைந்தன- சரத் பொன்சேகா

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை 80 டாங்கிகளுடன் தொடங்கிய போதும், போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டு 30 டாங்கிகளே இராணுவத்திடம் எஞ்சியிருந்ததாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது- விடுதலைப் புலிகளுக்கு எதிரான...

இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் சமுதாய மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இலங்கையில் சமுதாய மீறல்கள் மற்றும் மத பாகுபாட்டுச் சம்பவங்கள் கடந்த 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளதென ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் மத சுதந்திரம தொடர்பில் கடந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வருடம் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில்...

காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது _

_ 31.07.2012.யாழ்ப்பாணம் அரியாலை புனித பெனடிக் வீதியிலுள்ள காந்தி சன சமூக நிலையத்திலிருந்து காந்திஜியின் சிலை உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்...

வேன் - சைக்கிள் மோதலில் ஒருவர் பலி: 13 பேர் காயம் _

 _ 31.07.2012.சைக்கிள் - வேன் மோதலில் ஒருவர் மரணமடைந்தும் 13 பேர் காயமடைந்துமுள்ளனர்.திஸ்ஸமஹாராம, காசின்கம என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் சைக்கிளில் பயணம் செய்தவர் மரணித்ததுடன் வேன் மதகு ஒன்றிலும் மின் கம்பம் ஒன்றிலும் மோதி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதால் அதில் பயணித்த 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். ...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நபர் உயிரிழப்பு _

_ 31.07.2012.போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்....

34 வருடங்களுக்கு முன் இறந்ததாக நம்பிய பெண் பேஸ்புக் மூலம் இணைந்தார்

  _ 31.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சிட். இவரது மனைவி சூசன் ஆர்ட்ரன் (61). இவர்கள் தென் ஆபிரிக்காவில் ஜோகனஸ்பேர்க் நகரில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு வீதியில் தனியாகச் சென்ற இவர் மீது கார் மோதியது. இதனால் படுகாயமடைந்த பின் மயக்கம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையே வீடு திரும்பாததால் கணவர் சிட் அவரை பல இடங்களில்...

சிறைக் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்

 _ 31.07.2012கண்டியிலிருந்து தம்புள்ளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சிறைக் கைதிகளில் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைதிகள் பொலன்னறுவ மற்றும் பக்கமூன ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.சுவர் ஒன்றின் மீது தாவி தப்பிச் சென்ற இவர்களை கைது செய்ய பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரதப் பிரயத்தனம் எடுத்துள்ளனர். இக் கைதிகளில் ஒருவர் பின்னர் கைது செய்யப்ட்டதாகவும் தெரிய வருகிறத...

சுமிடோமா நிறுவனம் தனது செயற்பாடுகளை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க விருப்பம்: றிசாத்

 _ 31.07.2012.இலங்கையில் மீண்டும் தமது நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஜப்பான் சுமிடோமா நிறுவனம் தயாராகி வருகின்றது. 2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமது செயற்பாடுகளை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் சென்ற அந்நிறுவனம்,1968ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் பல் துறைகளில் தமது முதலீடுகளை செய்திருந்தது. மீண்டும் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க வருகைதருவதை தாம் பெருமனதுடன் வரவேற்பதாக கைத்தொழில்,வணிகத்...

மன்னார் நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் _ 31.07.2013.மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.மன்னார் நீதிமன்ற வீதியில் மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் கடந்த 18ஆம் திகதி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து...

பொகவந்தலாவையில் நகைகளைத் திருடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது

 _ 31.07.2012.பொகவந்தலாவை செல்வகந்தை தோட்டத்திலுள்ள வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை யாருமற்ற நேரத்தில் வீட்டுக் கூரையின் ஊடாக உட்புகுந்து தங்க நகைகளைத் திருடிய நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொகவந்தலாவைப் பொலிஸார் அவரை இன்று 31ஆம் திகதி அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட வீட்டைச் சேர்ந்தவர்கள் நோன்புக் காலத்தை முன்னிட்டு தொழுகைக்காக இரவு நேரத்தில் பொகவந்தலாவை...

சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 37 பேர் கைது _

_ 31.07.2012.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 28 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 37 ஆண்கள் கிழக்குக் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் வைத்துக் கைதான இவர்களை கடற்படையினர் திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். படகை செலுத்திச் சென்றவர் ஒரு சிங்களவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்...

ஈஸ்வர தியாகராஜ் மங்கலம் நாதஸ்வரம்

31.07.2012. பக்த்தர்கள் படை சூழமிகவும் பார்த்து ரசிக்ககூடியநாதஸ்வரஇசை நிகழ்வு அன்பர்கள் நண்பர்கள் பார்த்து மகிழவும் ...

பிரிட்டனில் 7 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்

31.07. 2012, பிரிட்டனில் குழந்தைகள் சிறுவயது முதலே போதைக்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக பிரிட்டனில் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான காரணம் குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சிறுவர்கள் இன்ப உலகில் மிதப்பதற்காக போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழக்கம் 7 வயதிலிருந்தே தொடங்கி விடுகிறது. அப்போது கேன்னபிஸ் எனப்படும்...

இங்கிலாந்தின் இரும்புப் பெண்ணுக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளை ஆசை

.31.07.2012, இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு அழகான ஆண்களை தான் பிடிக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை தாட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தாட்சருக்கு அறிவெல்லாம் பிறகு தான். அழகு தான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் நாடாளுமன்ற...

மொபைல் திருட்டில் தி சன் பத்திரிக்கையின் ஆசிரியர் கைது

 31 யூலை 2012, பிரித்தானியாவில் “தி சன்” பத்திரிக்கையின் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான நிக் பார்க்கெர் 51, என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள்ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப் பட்டுள்ளார். தான் திருடிய கைத் தொலைபேசிகளில் இருந்து தகவல்களைச் சூறையாடி தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியுள்ளார். ஃபோன் ஹாக்கிங் எனப்படும் இந்த மொபைல் திருட்டு...

கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்

31.07.2012, சுவிட்சர்லாந்தில் பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 600 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான தொகைக்கு வர்த்தக உடன்பாடு மேற்கொண்டுள்ளது. 2014ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை கத்தாரில் புதிதாகத் ஆரம்பிக்கப்பட்டுள்ள...

FIFA கால்பந்தாட்ட ஊழல் விசாரணையில் தடுமாற்றம்

31.07 2012, FIFA என்ற கால்பந்தாட்டக்கழகத்தில் நடந்த ஊழலைக் கண்டறிய இரண்டு சட்ட நிபுணர்களை நியமித்த பின்பும் அந்த ஊழல் விசாரணை தோல்வியுற்றதாகவே சிலர் சந்தேகப்படுகின்றனர். கடந்த வருடங்களில் நடந்த FIFA கால்பந்தாட்டத்தை தொலைக்காட்சிகளின் மூலம் சந்தை படுத்துவதற்காக அதன் நிறுவனர் JOAO HAVELANGE மற்றும் பிரேசில் கால்பந்தாட்ட தலைவர் RICARDO TEIXEIRA ஆகிய இருவரும் ISL என்ற மார்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக மில்லியன் சுவிஸ் ப்ரான்குகளை...

சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார் வங்கி சீனாவின் (BOC) யுடன் இணைந்தது

.31.07. 2012, சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார்(Julius Bar) என்கிற தனியார் வங்கியும் சீனாவின் மிகப்பெரிய வங்கியான (BOC) வங்கியும் இருவரும் இணைந்து செயல்படுவதற்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வங்கியின் வாடிக்கையாளர்கள், சந்தையிடுதல் மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து திட்டங்களிலும் இரு வங்கிகளும் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்பட உள்ளன. சீனாவின் (BOC) வங்கி அந்நாட்டின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த நான்கு வங்கிகளில் ஒன்றாகும்....

வங்கித் தகவல்களை திருடியவருக்கு அழைப்பு: சுவிஸ் அரசாங்கம்

.31.07. 2012, சுவிட்சர்லாந்தில் உள்ள HSBC வங்கியின் 2400 வாடிக்கையாளரின் ரொக்க இருப்பு குறித்த தகவல்களை திருட்டுத்தனமாக பிரிட்டிஷ்காரருக்கு விற்ற வழக்கில் ஃபால்சியானி என்பவரை ஸ்பெயின் அரசு கைது செய்துள்ளது. இவரிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்ற பிரிட்டிஷ்காரர் அதனை பிரெஞ்சு வரி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார். இவர் இத்தாலி மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் மூன்று வாரங்களுக்கு முன்பு ஸ்பெயினில் கைதானார். சுவிஸ் அதிகாரிகள்...

சுவிஸ் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியில் படங்கள் அறிமுகம்

.31.07. 2012, சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வி நடத்துவோர் மாணவர்களுக்கு பாலியலறிவைப் புகட்ட தகுந்த படங்களைக் காட்டலாம் என்று ஆசிரியர்களை பிரபல வழக்கறிஞர் மார்க்கஸ் தியூனெர்ட் வலியுறுத்தி வந்தார். உளவியலறிஞரும், சமூகவியலாளருமான மார்க்கஸ் தியூனெர்ட் சமீபத்தில் பதவி விலகியபோது ஆண்கள் மற்றும் தேசிய அமைப்பின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விடுபட இயலாது என்றார். அந்த அமைப்பின் மூலமாக அவர், விடுமுறை மற்றும் சில சமத்துவப் பிரச்னைகளுக்காகப்...

ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்

.31.07. 2012, சுவிட்சர்லாந்தில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் குறித்து சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மக்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை விட பொதுவான சமூகக் காரணத்துக்காகவே போராட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இம்முடிவுகளில் சுவிஸ் போராட்டங்களில் வயதானவர்களும் நன்கு படித்தவர்களும் சுவிஸ் அரசியல் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது....

ஜேர்மன் தீர்ப்பால் சுவிஸ்ஸில் விவாதம்

.31.07. 2012, ஜேர்மனியில் கோலோன் மாவட்ட நீதிமன்றம், சமயச்சடங்கான நுனித்தோல் அகற்றுதலை மருத்துவமனையில் செய்தால் அதற்குக் குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜுரிச் மற்றும் செயிண்ட் கேலன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவையை இனி எவருக்கும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். ஜுரிச் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் நாங்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு, மூன்று அறுவை மட்டுமே நடத்தினோம். அதுவும் சமயக்...

கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்

 31 07.2012, சுவிஸ்சின் குடியுரிமை வேண்டுவோருக்காக விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களை தொடர்ந்து இந்த மூன்றாண்டுகளில் சில குடியுரிமை விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மண்டலங்களில் சட்டதிட்டங்கள் மிகவும் நெருக்கமான முறையில் பின்பற்றப்படுவதாக பெடரல் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 2011ல் 26,100 ஆக குறைந்துள்ளது. கடைபிடிக்கப்பட்ட சில நெறிமுறைகளை...

வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்

  31 யூலை 2012, சுவிட்சர்லாந்தில் வீடு, கடை, கல்லூரி போன்ற கட்டிடங்களுக்குள் புகை பிடிப்பதைத் தவிர்க்க தேசிய அளவில் தடையைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் பொதுவாக்கெடுப்பு நடக்கின்றது. நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே நாடாளுமன்றம் புகை பிடிக்காதவர்களும், புகைபிடிப்பவரால் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் இப்போது நாடு முழுக்க ஒரே நடைமுறை இருக்க வேண்டும்...

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் திருப்பியனுப்ப பட்டமை இனப் பாகுபாடே காரணம்: “த அவுஸ்திரேலியன்”

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திரும்பியனுப்பப்பட்டதாக “த அவுஸ்திரேலியன்” நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை தளபதிக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் என வகைப்படுத்தி...

லண்டனில் 9வது நாளாக நடைபெற்றுக்​கொண்டிருக்​கும் சிவந்தனின் உண்ணாவிரதப் போராட்டம்

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தின் முன் சிவந்தன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை உறுதி தளராமல் ஒன்பதாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றார். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ...

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனு பிரணாப் முகர்ஜியிடம்..!

  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ள பேரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர். இம்மூவரின் மரதண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல...

உதயன் ஆசிரியர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, உதயன் ஆசிரியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை செய்வதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உறுதிப்படுத்தியுள்ளார். நீதி நலன் கருதி வேறு ஒரு நீதிபதி முன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதி...

யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்

  செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, யாழ்ப்பாணத்தில் அகிம்சாவாதி மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு த ஹிந்து பத்திரிகை கண்டனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு இந்த சிலையை சிலர் உடைத்திருப்பதாக...