siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

34 வருடங்களுக்கு முன் இறந்ததாக நம்பிய பெண் பேஸ்புக் மூலம் இணைந்தார்

 
_
31.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சிட். இவரது மனைவி சூசன் ஆர்ட்ரன் (61). இவர்கள் தென் ஆபிரிக்காவில் ஜோகனஸ்பேர்க் நகரில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு வீதியில் தனியாகச் சென்ற இவர் மீது கார் மோதியது. இதனால் படுகாயமடைந்த பின் மயக்கம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே வீடு திரும்பாததால் கணவர் சிட் அவரை பல இடங்களில் தேடினார். இருந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவேஇ அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கருதினர். அதைத் தொடர்ந்து தனது 4 குழந்தைகளுடன் சிட் இங்கிலாந்து திரும்பி லண்டனில் குடியமர்ந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூசனுக்கு அம்னீசியா என்ற ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதனால் தான் யார் என்பதையே அவர் மறந்து விட்டார். இதற்காக தென் ஆபிரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 34 வருடங்களுக்குப் பிறகு அதாவது தனது 61-வது வயதில் குணமடைந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.

அத்துடன் இளமைக் காலம் மற்றும் தற்போதைய தோற்றத்திலான போட்டோவையும் பிரசுரித்திருந்தார். அதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

34 வருடங்களுக்குப் பிறகு சூசன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

0 comments:

கருத்துரையிடுக