செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குளிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியைத் தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இராணுவத்தினர் முயற்சி தோல்வியடைந்தமையானது, பிரதேச மக்களுக்கு மகிழச்சியை அளித்ததுடன், புலியை சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் கிராம மக்கள் கிண்டலாக பேசித் திரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:
கருத்துரையிடுக