.31.07. 2012, |
சுவிட்சர்லாந்தில் உள்ள HSBC வங்கியின்
2400 வாடிக்கையாளரின் ரொக்க இருப்பு குறித்த தகவல்களை திருட்டுத்தனமாக
பிரிட்டிஷ்காரருக்கு விற்ற வழக்கில் ஃபால்சியானி என்பவரை ஸ்பெயின் அரசு கைது
செய்துள்ளது.
இவரிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்ற பிரிட்டிஷ்காரர் அதனை பிரெஞ்சு வரி
அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார். இவர் இத்தாலி மற்றும் பிரெஞ்சு குடியுரிமை
பெற்றவர். இவர் மூன்று வாரங்களுக்கு முன்பு ஸ்பெயினில் கைதானார். சுவிஸ் அதிகாரிகள் யூலை 5ம் நாள் மேட்ரிட் நீதிமன்றத்திலிருந்து ஃபால்சியானியை சுவிட்சர்லாந்தின் விசாரணைக்கு அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும் நீதிபதிகள் இது குறித்து முடிவு ஏதும் தெரியவிக்கவில்லை. மேலும் 40 நாட்களில் அமைச்சரவை முடிவெடுக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் HSBC வங்கியில் சிறப்புக் கணனியாளராக இருந்த ஃபால்சியானி ஸ்பெயினில் கைதாகியிருப்பதை நேற்று பிரெஞ்சு ஊடகங்கள் உறுதி செய்தன. இத்தகவலை மத்திய நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஃபால்சியானா, சுவிஸ் நாட்டு வங்கி ரகசியச் சட்டங்களுக்குப் புறம்பாக வாடிக்கையாளர் பற்றிய தகவல்களைத் திருடிக் கொடுத்துவிட்டு பிரான்சுக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். அவரைப் பிடிக்க 2010 ஒகஸ்ட்டில் சர்வதேச அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை இருந்ததாலும், பிரான்ஸ் அரசு தனது குடிமக்களை வழக்குத் தீர்க்க நாடுவிட்டு நாடு அனுப்பும் பழக்கமில்லை என்பதாலும் அந்த அழைப்பாணை அலட்சியப் படுத்தப்பட்டது. இப்போது ஸ்பெயினுக்கு வந்தபோது இவர் கைதாகியிருப்பதால் ஸ்பெயின் அரசு சுவிட்சர்லாந்துக்கு இவரை அனுப்பிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
செவ்வாய், 31 ஜூலை, 2012
வங்கித் தகவல்களை திருடியவருக்கு அழைப்பு: சுவிஸ் அரசாங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக