| ||||||||
2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமது செயற்பாடுகளை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் சென்ற அந்நிறுவனம்,1968ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் பல் துறைகளில் தமது முதலீடுகளை செய்திருந்தது. மீண்டும் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க வருகைதருவதை தாம் பெருமனதுடன் வரவேற்பதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சுமிடோமா நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்பாளர் மசாஹிரோ புஜிதா அமைச்;சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்தச் சந்திப்பின் போது சுமிடோ நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் சென்னைக் கிளைகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர். 2012ஆம் ஆண்டு 26.8 டொலர் மில்லியன் வருமானமாகக் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த புஜிதா, சுமிடோமா நிறுவனம் 65 நாடுகளில் 5185 ஊழியர்களைக் கொண்டு தமது பணியை முன்னெடுப்பதாகவும் கூறினார். தொலைத்தொடர்புகள் கோபுரம் அமைப்பு, பாரம் தூக்கி இயந்திரம், கனரக இயந்திரம் போன்ற துறைகளில் பிரபலமான நிறுவனமாக சுமிடோமா நிறுவனம் உள்ளது. தமது நிறுவனத்தின் செயற்பாடுகளை மீள இலங்கையில் ஆரம்பிப்பதற்கு முன்னர் தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றத்தைக் காண்பதற்கு எமது குழுவினருடன் வருகை தந்துள்ளதாகவும் தாம் இங்கிருந்து 2009இல் விடை பெற்றுச் செல்ல முன்னர், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர் விநியோகம்,தொலைத்தொடர்பு வசதிகள் என்பனவற்றை முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார். தமது அடுத்த கட்ட செயற்பாடாக விவசாய இரசாயனப் பொருட்கள் உற்பத்தி,உணவு மற்றும் மென்பான உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். அதே வேளை உல்லாசத் துறை, கைத்தொழில் உடட்கட்டமைப்பு வசதிகள், இலங்கையில் இருந்து இறப்பர் ஏற்றுமதிக்கான கவனத்தையும் செலுத்துமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் சுமிடோமா நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்பாளரிடம் எடுத்துரைத்தார். 2008ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து விடைபெற்றுச் சென்ற ஜப்பானின் பிரபல நிறுவனமான மருபேனி நிறுவனம் மீண்டும் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிக்க எற்கனவே பேச்சுக்களை நடத்தியிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது |
செவ்வாய், 31 ஜூலை, 2012
சுமிடோமா நிறுவனம் தனது செயற்பாடுகளை இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்க விருப்பம்: றிசாத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக