31 07.2012, |
சுவிஸ்சின் குடியுரிமை
வேண்டுவோருக்காக விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களை தொடர்ந்து இந்த மூன்றாண்டுகளில்
சில குடியுரிமை விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மண்டலங்களில் சட்டதிட்டங்கள் மிகவும் நெருக்கமான முறையில்
பின்பற்றப்படுவதாக பெடரல் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 2011ல் 26,100 ஆக குறைந்துள்ளது. கடைபிடிக்கப்பட்ட சில நெறிமுறைகளை தொடர்ந்து விண்ணப்பத் தாரர்களின் எண்ணிக்கை தானாகவே குறைந்துள்ளது. பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை அலுவலகங்களில், கடைபிடிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தகுதியான கட்டாய மொழி படிப்பு, ஆகியவை விண்ணப்பங்கள் குறைவதற்கு காரணமாக இருந்ததாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2004ல் 32000மாகவும், 2008ல் 34,965மாகவும் அதிகரித்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தற்போது நடப்பு ஆண்டுகளில் குறையத் தொடங்கியுள்ளன. |
செவ்வாய், 31 ஜூலை, 2012
கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக