| ||||||||
நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அரியாலை காந்தி சன சமூக நிலையத்திலிந்த குறித்த காந்தி சிலையானது இனந் தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தியிருந்தாகவும் அத்தோடு அவர்களுடன் மேலும் இருவர் இருந்தாகவும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் |
செவ்வாய், 31 ஜூலை, 2012
காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது _
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக