siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

உதயன் ஆசிரியர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
உதயன் ஆசிரியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை செய்வதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதி நலன் கருதி வேறு ஒரு நீதிபதி முன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதி சேவை ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவெளை, யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்திற்கு நிதி உதவி செய்து வரும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதி, நேற்று முன்தினம் இரவு யாழ். குடாவில் உள்ள ஊடகங்களின் முதன்மையானவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
அவ் இரவு விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் டான் தொலைக்காட்சியின் சார்பில் கலந்துக்கொண்ட மூத்த ஊடகவியலாளர் வேல்தஞ்சனுக்கும் உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந்திற்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாயவுக்கும் டக்ளசுக்கும் துதிபாடுவதாக, உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரேமானந், டான் தொலைகாட்சி சார்பில் கலந்தக்கொண்ட வேல்தஞ்சனிடம் கூறிய போது, இறந்து போன பிரபாகரனின் ஆவிக்கு துதிபாடுவதை விட உயிரோடு இருப்பவர்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு துதி பாடலாமென வேல்தஞ்சன் கூற வாயத்தர்க்கம் சூடுபிடித்திருக்கின்றது.
இதனால் உணர்ச்சிவசப்ட்ட பிரேமானந், சபைகளில் பாவிக்க தகாத தூசன வார்த்தைகளால் பேசியதுடன் வேல்தஞ்சனை தாக்க முனைந்த போது குறித்த வெளிநாட்டு பிரதிநிதி இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரியவருகின்றது.
சபையில் பாவிக்க தகாத வார்த்தைகளை உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந் பாவித்ததையடுத்து, ஏனைய ஊடகவியலாளர்கள் முகத்தை சுழித்துக்கொண்டு வெளிறேயிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று டான் தொலைக்காட்சியல் பத்திரிகைகள் பார்வை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வேல்தஞ்சன் ஏறத்தாள 20 நிமிடங்கள் இது தொடர்பில் தனது பக்க நியாயத்தை நேற்று கொட்டித் தீர்த்துள்ளார்.
மக்கள் நம்பும் ஊடகங்களில் வேலை செய்யும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மூத்த ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தைகளிலும் தெருக்களிலும் பாவிக்கின்ற வசனங்களை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்கள் பாவிப்பதானது ஊடகவியலாளர்களை வெட்கமடையச் செய்திருக்கின்றது

0 comments:

கருத்துரையிடுக