siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் அழிவடைந்தன- சரத் பொன்சேகா

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை 80 டாங்கிகளுடன் தொடங்கிய போதும், போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டு 30 டாங்கிகளே இராணுவத்திடம் எஞ்சியிருந்ததாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், 200 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை வழங்கியிருந்தேன்.
இது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவானது. அது நியாயமானதே.

நான் போரைத் தொடங்கியபோது, இலங்கை இராணுவத்தில் 80 டாங்கிகள் இருந்தன.

போர் முடிவுக்கு வந்தபோது 30 டாங்கிகளே எஞ்சியிருந்தன.
போரின் போது டாங்கிகளை பழுதுபார்ப்பதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
இதனால், போரின் இறுதி நாட்களில், பெரும்பாலும் டாங்கிகள் இன்றியே நான் சண்டை செய்ய வேண்டியிருந்தது.
போர் முடிந்த பின்னரும் நாம் இந்த துருப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது.
அந்தநிலையில் சேதமடைந்து பழுதுபார்க்காத டாங்கிகளை கழித்து விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அதற்காகவே, 200 மில்லியன் டொலருக்கு கவச வாகனங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டேன்.

அது ஒரு இராணுவத் தளபதி என்ற முறையில் எனது கடமை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 15 பொலிஸாரின் பாதுகாப்பு திருப்தி தரவில்லை. எனக்கு புலிகளின் அச்சுறுத்தல் உள்ளது.
தனிப்பட்ட நபர் ஒருவரால் அல்லது இருவரால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களால் பாதுகாப்பு வழங்கமுடியும். ஆனால் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து என்னைக் காப்பாற்ற 15 பொலிஸாரினால் முடியாது.என்றார் சரத் பொன்சேகா.

0 comments:

கருத்துரையிடுக