| |||
.31.07. 2012, | |||
சுவிட்சர்லாந்தில்
பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை
அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை
அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் சுமார் 600 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான தொகைக்கு
வர்த்தக உடன்பாடு மேற்கொண்டுள்ளது. 2014ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை கத்தாரில்
புதிதாகத் ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை பயிற்சிக் கல்லூரிக்கு, பயிற்சி
விமானங்களை பிலேட்டுஸ் நிறுவனம் அனுப்பவுள்ளது. இதனால் உலகத்தரத்தில் தனது விமானப்படையின் தரத்தையும் உயர்த்த கத்தார் எமிரி விமானப்படை முடிவு செய்துள்ளதாக பிரேட்டுஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக பிளேட்டுஸ், இந்த கத்தார் வியாபாரத்தைக் கருதுகிறது. மே மாதம் இதே நிறுவனம் சவுதி அரேபியாவுக்கு 55, Pc – 21 ரக விமானங்களை அனுப்பியது. இந்தியாவுக்கு 75, PC – 7 ரக விமானங்களை அனுப்பியது. பிளேட்டுஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் இந்தியாவுக்கு பயிற்சி விமானங்களை விற்பதால் 400 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பேஸிஃபிஸ்ட் என்ற சமாதான அமைப்பு தனக்கென்று ராணுவம் வைத்துக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, மனித உரிமை மீறலில் குற்றம் சாட்டப்பட்ட கத்தாருக்கு போர் விமானங்களை விற்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்த்தார் தனது குடிமக்களுக்கு எதிராகக் கூட இந்தப் போர் விமானங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பயிற்சி விமானங்களை சட்டத்தின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறாகும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. |
செவ்வாய், 31 ஜூலை, 2012
கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக