.31.07. 2012, |
ஜேர்மனியில் கோலோன் மாவட்ட நீதிமன்றம்,
சமயச்சடங்கான நுனித்தோல் அகற்றுதலை மருத்துவமனையில் செய்தால் அதற்குக் குற்றவியல்
சட்டப்படி தண்டனை வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதனால் ஜுரிச் மற்றும் செயிண்ட் கேலன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவையை
இனி எவருக்கும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். ஜுரிச் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் நாங்கள் ஒரு மாதத்துக்கு இரண்டு, மூன்று அறுவை மட்டுமே நடத்தினோம். அதுவும் சமயக் காரணங்களுக்காக மட்டுமே செய்தோம் என்று கூறினார். ஆனால் சில வேளைகளில் தாயார் விருப்பம் தெரிவிக்க தந்தை மறுப்பு தெரிவிப்பது உண்டு என்றார். சுவிட்சர்லாந்தில் உள்ள சமயவாதிகளுக்கும், யூதர்களுக்கும் நுனித்தோல் அகற்றுதல் முஸ்லீம்களுக்கும் (சுன்னத்) இந்த அறுவை ஒரு கட்டாய சமயச் சடங்காகும். ஆனால் மருத்துவமனைகள் இவ் அறுவையைச் செய்ய மறுத்தால் அது மக்களின் சமய சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற கருத்து காணப்படுகிறது. ஃபிரிபோக் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்டப் பேராசிரியரான மார்செல் நிக்லி, ஜேர்மனியில் வெளிவந்த தீர்ப்புக்கு சுவிட்சர்லாந்தில் விவாதம் தேவையில்லை என்றார். இவ்விரு நாடுகளின் சட்டங்களும் ஒருமித்த கருத்துடையனவாக இருந்தாலும் ஒருவரின் சுகாதார மேம்பாட்டுக்காக நடத்தப்படும் அறுவையை, காயம் என்று கருத இயலாது என்றார். ஆனால் ஜுரிச் பல்கலைக்கழகத்தின் குற்றவியலறிஞரான பேரா. மார்ட்டின் கில்லியாஸ் “வெகுகாலமாக இந்தப்பிரச்னை குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேர்மனி நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை இன்னும் தூண்டிவிட்டுள்ளது. மருத்துவமனைகள் இந்த அறுவையை செய்வதில்லை என்று எடுத்திருக்கும் முடிவு மிகமிகச் சரியானதே” என்றார். “குற்றவியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பார்த்தால் மருத்துவமனைகள் இந்த அறுவையைச் செய்ய விரும்புகின்றனரா என்பதை அறியவேண்டும். நம்முடைய மருத்துவ தர்மத்திற்கு எதிராக இந்த அறுவை இருக்கின்றது என்பது தான் நமது மருத்துவமனைகளின் பதிலாக இருக்கும் எனது நான் நம்புகிறேன்” என கில்லியாஸ் தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 31 ஜூலை, 2012
ஜேர்மன் தீர்ப்பால் சுவிஸ்ஸில் விவாதம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக