| ||||||||
மன்னார் நீதிமன்ற வீதியில் மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் கடந்த 18ஆம் திகதி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டது. இதன் போது நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் சம்பவத் தினமன்றே குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னாரைச் சேர்ந்த 13 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது குறித்த 13 பேரையும் இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 13 பேரும் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை(13-08-2012) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதே சமயம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 35 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் இன்று மன்னார் பொலிஸார் எவரையும் மன்றில் ஆஜர்படுத்தவில்லை. இன்றைய தினம் மன்னார் நீதிமன்றப் பகுதியில் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் விசேடமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது |
செவ்வாய், 31 ஜூலை, 2012
மன்னார் நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக