siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

FIFA கால்பந்தாட்ட ஊழல் விசாரணையில் தடுமாற்றம்

31.07 2012,
FIFA என்ற கால்பந்தாட்டக்கழகத்தில் நடந்த ஊழலைக் கண்டறிய இரண்டு சட்ட நிபுணர்களை நியமித்த பின்பும் அந்த ஊழல் விசாரணை தோல்வியுற்றதாகவே சிலர் சந்தேகப்படுகின்றனர்.
கடந்த வருடங்களில் நடந்த FIFA கால்பந்தாட்டத்தை தொலைக்காட்சிகளின் மூலம் சந்தை படுத்துவதற்காக அதன் நிறுவனர் JOAO HAVELANGE மற்றும் பிரேசில் கால்பந்தாட்ட தலைவர் RICARDO TEIXEIRA ஆகிய இருவரும் ISL என்ற மார்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக மில்லியன் சுவிஸ் ப்ரான்குகளை பெற்றனர்.
இது தொடர்பான ஊழல் வழக்கு தற்போது சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்கான விசாரணையை மேற்கொள்ள அமெரிக்கா சட்டத்தரனி மைக்கேல் கார்ஷியாவும் ஜேர்மனி நீதிபதி ஜோவாக்கிம் எக்கெரட்டும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இப்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான கார்ஷியா, கால்பந்தாட்டக் கழகத்தில் வெகு நாட்களாக ஊறிப்போயுள்ள ஊழல் குற்றங்களைக் கண்டறிந்து முறையாக விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
FIFAவின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுவிஸ் நாட்டின் ஊழலெதிர்ப்பு நிபுணர் மார்க் பீய்த்தின் தலைமையிலான ஒரு குழு மேற்கூறிய இருவரையும் நியமித்துள்ளது.
இந்த மார்க் பீய்த், Tages Aziger என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், கடந்த 17ம் திகதி முதல் இவ்விசாரணை நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல நடவடிக்கைகள் நடைபெற வேண்டியுள்ளது என்றார்.
இவரது கருத்துப்படி FIFA- 2013 கூட்டத்திற்கு முன்பு எந்த உருப்படியான முடிவுகளும் வெளிவராது என எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் கட்சியின் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரோலாண்ட் பூக்கெல், தொடர்ந்து FIFAவின் முறைகேடுகளை விமர்சித்து வருகிறார்.
இவர் Swiss info.chக்கு அளித்த பேட்டியில், இந்த வருடத்திற்குள் ஃபிஃபா தன்னை ஊழலிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் அல்லது பல மில்லியன் டொலர் புழங்கும் கால்பந்தாட்டத் தொழிலுக்கு இன்னும் விளையாட்டுக்கழகம் என்ற தகுதி இருக்கின்றதா என்று நாங்கள் கேட்கும் சூழ்நிலை உருவாகும் என்றார். மேலும் வரிச்சலுகை பெறும் தகுதி உண்டா என்ற கேள்வியும் எழும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக