| ||||||||
நேற்று முன்தினம் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார். குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று மாலை நான்கு மணியில் திடீரென சுகவீனமடைந்துள்ளார். இவ்வாறு சுகவீனமுற்ற சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வாழைத்தோட்டம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
செவ்வாய், 31 ஜூலை, 2012
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நபர் உயிரிழப்பு _
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக