siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

இலங்கைக்கு தலையிடியாக மாறும் பண வீக்கம் - மேலும் உயரும் அபாயம்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையின் பண வீக்கம் மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் நாட்டின் வருடாந்த பண வீக்க வேகம் 9.4 ஆக உயர்வடைந்துள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் நாட்டில் பதிவான மிக உயர்வான பணவீக்க வீதம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செலவு உயர்வு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியனவே பணவீக்க அதிகரிப்பிற்கான காரணங்களாகும். வரட்சி காரணமாக உணவுப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்கம் தொடர்பான கணிப்பீடுகளின் போது உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக