|
|
|
31 யூலை 2012, |
பிரித்தானியாவில் “தி சன்”
பத்திரிக்கையின் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான நிக்
பார்க்கெர் 51, என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள்ளைக் குற்றம் தொடர்பாக
ஸ்காட்லாந்து யார்ட் புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.
தான் திருடிய கைத் தொலைபேசிகளில் இருந்து தகவல்களைச் சூறையாடி தனது சொந்தத்
தேவைக்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஃபோன் ஹாக்கிங் எனப்படும் இந்த மொபைல் திருட்டு மற்றும் ஒட்டுக் கேட்டல்
செயற்பாடுகளுக்காக சமீபத்தில் ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸால் ஆப்பரேஷன் 'வீட்டிங்'
மூலம் 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 19ம் திகதியில் இதே குற்றத்திற்காக தி சன் பத்திரிகையாளரான 'ரோட்ரி
பிலிப்ஸ்' என்பவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது |
|
0 comments:
கருத்துரையிடுக