siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்

.31.07. 2012,
சுவிட்சர்லாந்தில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் குறித்து சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மக்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை விட பொதுவான சமூகக் காரணத்துக்காகவே போராட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இம்முடிவுகளில் சுவிஸ் போராட்டங்களில் வயதானவர்களும் நன்கு படித்தவர்களும் சுவிஸ் அரசியல் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினிலும் இந்த ஆய்வை நிகழ்த்தியது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போராட்டக்காரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
போராட்டக்காரர்களின் நோக்கத்தையும் அவர்களின் சமூகப் பின்புலத்தையும் அறிய விரும்பி, போராட்டம் நடைபெறும் வேளையில் இது குறித்து விசாரிப்பது சிறப்பானதாக இருக்கும் என்பதால் போராட்டக்களத்திலேயே ஆய்வை நடத்தியதாக ஜெனீவா பல்கலைக்கழகத்தின் மார்கோ கியூக்னி கூறினார்.
இந்தப் போராட்டங்களில் 40 – 64 வயதுள்ளவர்களும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொண்டனர். கல்வியும் அரசியல் சிந்தனையும் இணைந்து செல்வதை இப்பங்கேற்பு உணர்த்தியது. பங்கேற்பாளரில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்வியறிவில் குறைந்தவராக இருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக