siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

இலங்கையின் சுயாதீன தேர்தல் நடத்தப்படும் என்று ஐரொப்பிய ஒன்றியம்

இலங்கையின் சுயாதீன தேர்தல் நடத்தப்படும் என்று ஐரொப்பிய ஒன்றியம் நம்பிக்கை
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையில் சுதந்திரமான தேர்தல் ஒன்று நடத்தப்படும் என நம்புவதாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவித்த போது, ஆயுத கலாசாரம் அற்ற, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்படுவதை அமெரிக்கா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உயர்ஸ்தானிகர் பேர்னாட் சாவோஜ், இலங்கையில் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆயுத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக