.31.07. 2012, |
சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வி
நடத்துவோர் மாணவர்களுக்கு பாலியலறிவைப் புகட்ட தகுந்த படங்களைக் காட்டலாம் என்று
ஆசிரியர்களை பிரபல வழக்கறிஞர் மார்க்கஸ் தியூனெர்ட் வலியுறுத்தி வந்தார்.
உளவியலறிஞரும், சமூகவியலாளருமான மார்க்கஸ் தியூனெர்ட் சமீபத்தில் பதவி
விலகியபோது ஆண்கள் மற்றும் தேசிய அமைப்பின் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விடுபட
இயலாது என்றார். அந்த அமைப்பின் மூலமாக அவர், விடுமுறை மற்றும் சில சமத்துவப்
பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார். இவர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்கள் வகுப்பறையில் பாலியல் படங்களைக் காட்டுவதால் மாணவர்கள் அப்படங்களைக் கையாளும் முறையைக் கற்றுக் கொள்வர் என்றார். “பதினாறு வயதுக்குப் குறைந்தவர்களிடம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபாசப் படங்களையும், பொருட்களையும் பெற்றோரும் பயிற்சிபெற்ற நிபுணரும் காண்பிப்பது சட்டப்படி குற்றமானது” என்று சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று தியூனெர்ட் அமைப்பினர் போராடி வருகின்றனர். இன்றைக்கு பெரும்பாலான சிறுவர்கள் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலமாக ஆபாசப்படங்களைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் வகுப்பில் சில நிமிடங்கள் மென்மையான பாலியல் படங்களை மாணவர்களுக்கு காண்பிக்கலாம் என்றார் தீயூனெர்ட். இவர் Manner.ch என்ற ஆண்களுக்கான அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும் ஆடவர் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். சுவிட்சர்லாந்தில் பாலியல்கல்வியின் அளவையும், பாட வரையறையையும் தற்போது மாநில அரசுகள் கவனித்து வருகன்றன. |
முகப்பு |
0 comments:
கருத்துரையிடுக