| ||||||||
கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட வீட்டைச் சேர்ந்தவர்கள் நோன்புக் காலத்தை முன்னிட்டு தொழுகைக்காக இரவு நேரத்தில் பொகவந்தலாவை பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளனர். இதனை அவதானித்த நபரொருவரே கூரையின் ஊடாக வீட்டினுள் சென்று சுமார்; ஐந்தரை இலட்சம் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டாரின் உறவினர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே குறிப்பிட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளைத் தொடர்ந்து அவரிடமிருந்து, திருடப்பட்ட நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேக நபர் பொகவந்தலாவை பொய்ஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். |
செவ்வாய், 31 ஜூலை, 2012
பொகவந்தலாவையில் நகைகளைத் திருடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக