31 யூலை 2012, |
சுவிட்சர்லாந்தில் வீடு, கடை,
கல்லூரி போன்ற கட்டிடங்களுக்குள் புகை பிடிப்பதைத் தவிர்க்க தேசிய அளவில் தடையைக்
கொண்டு வரவேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் பொதுவாக்கெடுப்பு
நடக்கின்றது.
நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே நாடாளுமன்றம் புகை பிடிக்காதவர்களும்,
புகைபிடிப்பவரால் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது. இருப்பினும் இப்போது நாடு முழுக்க ஒரே நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுவிஸ் நுரையீரல் நலச் சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது. இதற்கு சுகாதார அமைப்பு, நுகர்வோர் சங்கம், தொழிற்சங்கம், மைய இடதுசாரிக் கட்சிகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போது உணவகங்களிலும், மதுபானக்கூடங்களிலும் தனியாக புகைபிடிப்போருக்கென்று தனியறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மைய, வலதுசாரிக் கட்சிகள் உணவகத் தொழிலதிபர்களுடன் சேர்ந்து, மாநில அரசுகளுக்கு இதுபோன்ற விடயங்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் போது மத்திய அரசு இதில் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்து விமர்சிக்கின்றன. நுரையீரல் நல அமைப்பின் தலைவரான ஆட்டோ பில்லெர், நாங்கள் புகைபிடிப்பவரைக் குற்றம் சொல்லவில்லை. அவர்களின் புகை மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது என்பதையே வலியுறுத்தி வருகிறோம் என்றார். இப்போது பணியிடங்களிலும் பலர் கூடும் திரையரங்கு, அங்காடி போன்ற இடங்களிலும், சாலை, தெரு போன்ற பொதுவிடத்திலும் புகை பிடிக்க அனுமதியில்லை. மதுபானக்கூடங்கள் சிலவற்றில் புகை பிடிப்பதற்கென்று தனிக்கூடங்கள் உள்ளன. 26 மாநிலங்களில் பதினைந்து மாநிலத்தில் இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் புகைபிடிப்பவர்களிடம் சற்று தாராளமாக நடந்து கொள்கிறது |
செவ்வாய், 31 ஜூலை, 2012
வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக